செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு பிரேஸிலியன் கிராண்ட் பிரிக்ஸ்: லீவிஸ் ஹெமில்டன் முதலிடம்!

பிரேஸிலியன் கிராண்ட் பிரிக்ஸ்: லீவிஸ் ஹெமில்டன் முதலிடம்!

1 minutes read

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் பிரேஸிலியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹெமில்டன் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 23 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

இதன்படி, நடப்பு ஆண்டின் 19ஆவது சுற்றான பிரேஸிலியன் கிராண்ட் பிரிக்ஸ், நேற்று ஜோஸ் கார்லோஸ் பேஸ் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 305.909 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹெமில்டன், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 32 நிமிடங்கள் 22.851 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டது.

அவரை விட 10.496 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டபேன் இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.

13.576 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ், மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 18 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 19 சுற்றுகளின் முடிவில், ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டபேன் ஒன்பது வெற்றிகளுடன் 332.5 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் உள்ளார்.

மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹமில்டன் ஆறு வெற்றிகளுடன் 318.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ், ஒரு வெற்றியுடன் 203 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அடுத்த இருபதாவது சுற்றான கட்டார் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும்; 21ஆம் திகதி, லோசைல் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More