ஏற்கனவே 2 போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், இதுவரை விளையாடாத வீரர்களுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, 3-வது போட்டியிலும் வெற்றிபெற்று நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்ய இந்திய வீரர்கள் முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், நியூசிலாந்தை பொறுத்தவரை அணித்தலைவர் கேன் வில்லியம்சன் இல்லாதது பெரிய இழப்பாகவே கருதப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் நியூசிலாந்து வீரர்களும் இன்றையதினம் முனைப்புடன் செயற்படுவார்களென கருதப்படுகிறது.
இரு அணிகளுக்கு இடையில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.