0
சோட்டோகான் தேசிய கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி பழைய மாணவர்கள் இருவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தப் போட்டி அண்மையில் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
இதில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்ற என்.எம். உமைர் பிரிவு 3 காதா மற்றும் குமிதே போட்டிகளிலும், ஏ.கே.எம். ஹஸ்னத் கான் கறுப்புப் பட்டி கராத்தா போட்டியிலும் தங்கப் பதக்கங்களை வென்றனர்.