ஆர்ஜன்டீன நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் இருந்து இந்த பருவத்துடன் வெளியேறவிருக்கும் நிலையில் அடுத்த பருவத்தில் சவூதி அரேபியாவின் அல் ஹிலால் அணிக்கு ஆட இணங்கி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த பருவம் முடிவில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியுடனான மெஸ்ஸியின் ஒப்பந்தம் காலவதியாகவுள்ள நிலையிலேயே கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடும் அல் நாசர் அணியின் போட்டி அணியாக உள்ள அல் ஹிலாலுக்காக ஆட அவர் தீர்மானித்திருப்பதாக நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.