2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள் பல,அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக்குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
இதுமட்டுமல்லாது பல விசேட பிரிவுகளை வைத்தியர்கள் பொறுப்பேற்று இயக்கி வந்ததுடன் அந்த பிரிவுகளின் வளர்ச்சி பற்றியும் அடிக்கடி கலந்துரையாடல் இடம்பெற்றன. மிகச் சிறப்பாக கட்டப்பட்ட இவ் வைத்தியசாலையின் நோயாளர்கள் விடுதிகள் அனைத்தும் முதலாம் மாடிக் கட்டடத்தில் இயங்குகின்றன. போதியளவு காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் தாராளமாக விடுதிகளுக்கு கிடைப்பதனால் சிகிச்சை பெறுபவர்கள் இதன் சௌகரியத்தை அனுபவிக்க முடியும்.
அவ்வாறே கீழ்ப் பகுதியில் சுமார் 100m தூரம் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் பகுதி மற்றும் மருந்து வழங்கும் பகுதி இருப்பதோடு அதனோடு அண்டிய பிரதேசங்கள் புல் வெளிகளையும் பூ மரங்களையும் கொண்டிருக்கின்றன. சிகிச்சை பெற வருபவர்கள் ஓர் இயற்கை சூழலை அனுபவிக்கக் கூடியதாக இருக்கின்றது.
சிக்கலான மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில் ஒற்றுமை, புரிந்துணர்வு,coordination மிக அவசியமாகின்றது. 2002 சமாதான காலப்பகுதியிலிருந்து இந்த Team work கட்டி எழுப்பப்பட்டதனால் போர் சூழலில் அதனை எதிர்கொள்ள இலகுவாக இருந்தது. மேலும் 2007ம் ஆண்டு பகுதியில் வெளிநோயாளர் கிளினிக் பகுதியில் ஓர் அறையில் வைத்தியர்களின் ஒன்றுகூடல் அறை மற்றும் தேநீர் வசதிக்கான இடமாக வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. காலை 10.30 மணிக்கு அப் பகுதிக்கு அனைவரையும் தினசரி தேநீருக்கு ஒன்றுகூடுமாறு அழைக்கப்பட்டதோடு அங்கு குறுகிய நேரத்தில் பல தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எட்டப்பட்டன. குறிப்பாக சேவைகளின் முன்னேற்றம், சேவைகளின் சிக்கல் தன்மைகளை போக்குதல் விரைவாக ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.
வைத்தியர்களில் சிலர் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். டாக்டர்.சிவானந்தன் போர்க்கால காயங்களுக்கான சிறப்பு சிகிச்சை வகுப்புக்களை நடாத்தினார். இதன் பயனாக காயப்பட்டு வருபவர்களுக்கான சிகிச்சையளிப்பதில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டது.
போர் சூழ்நிலையிலும் பற்சிகிச்சை சேவையை கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மட்டுமல்லாது ஏனைய ஐந்து வைத்தியசாலைகளிலும் வழங்கக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது.
மருத்துவர் சங்கம் மட்டுமல்லாது தாதியர் சங்கம், வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம்………
தொடரும்…..
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/