அங்கம் – 07 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 07 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

1723170_10202582919986941_1162400660_n

 

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள் பல,அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….

முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக்குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..

 வணக்கம்LONDON –

 

 

வைத்தியசாலையில் ஊழியர்களுக்கான பயிற்சி நடந்துகொண்டிருந்த அதேவேளை சிகிச்சைக்காக வந்த நோயாளர்களுக்கு மேலும் பல தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. பல்வேறு அமைப்புக்களின் அனுசரணையுடன் நோயாளர்களின் மேலதிக தேவைகள் கவனிக்கப்பட்டன.

2007 ஜனவரி 1ம் திகதியில் மன்னார் பகுதியில் விமானக்குண்டு வீச்சில் கால்களை இழந்த சிறுவன் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பொது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வேறு அவயவங்களை இழந்தவர்கள் பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றபோது அவர்களுக்கு சக்கர நாற்காலி, ஊன்றுகோல் மற்றும் பல உபகரணங்களை வழங்கவேண்டி இருந்தது. இவற்றை தொண்டு நிறுவனங்களின் உதவியோடு வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை ஒரளவேனும் கவனிக்கவேண்டி இருந்தது.

வைத்தியசாலை மேம்பாட்டுப் பேரவை உள்ளூர் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியைப் பெற்று கடுமையான வருத்தங்களுக்கு உள்ளாகுபவர்களுக்கு உதவிகளை வழங்கி வந்தது.

 

கால்களை இழந்த சிறுவனுக்கு சக்கர வண்டி வழங்கப்பட்டது.

1658655_10202582917906889_1823050662_o

 

போரினால் அவயவங்களை இழந்தவரின் உறவினரிடம் நிதியுதவி கையளிக்கப்பட்டது

 

1597223_10202582916586856_394736704_o

 

 

அவயவங்களை இழந்தவர்களுக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது.

1013443_10202582918626907_328776673_n

 

ICRC பிரதிநிதி காயமடைந்தவர்களுக்கான நோயாளர் பொதியை வழங்கினார்

 

1000964_10202582919626932_983247177_n

 

 

தொடரும்………..

 

dr.sathy_   வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து

 

 

முன்னைய அங்கங்கள்…….

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/

http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/

 

 

ஆசிரியர்