2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
கிளிநொச்சி நகரில் இருந்து வெளியேறிய மக்கள் தர்மபுரம், விஸ்வமடு, உடையார்கட்டு ஆகிய பகுதிகளில் செறிவாக குடியேறிய மக்கள் அப்பகுதியில் கணிசமான அளவு இடம்பெயர் வியாபார நிறுவனங்களை நடத்தி வந்தனர்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு நெருக்கடிகளின் மத்தியிலும் தமது அன்றாட கடமைகளை செய்யவேண்டி இருந்தது . இடம்பெயர்ந்த பாடசாலைகள் அப்பகுதிகளில் இயங்கி தொடங்கின . பல பாடசாலைகள் தர்மபுரம் மகாவித்தியாலயத்தில் உள்ள கட்டடங்களிலும் கொட்டைகைகளிலும் நடைபெற்றன. அது தவிரவும் பயிர் செய்கை செய்யாமல் இருந்த வயல்ப்பகுதிகளிலும் இடம்பெயர்ந்த பாடசாலைகள் இயங்க ஒழுங்குகள் செயப்பட்டிருந்தன.
நெருக்கடிக்களின் மத்தியிலும் கல்வியை கற்பது தமக்கு முக்கியத்துவம் என அனைத்து மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் உணர்ந்திருந்தனர்.
கிளிநொச்சி வைத்தியசாலை மேம்பாட்டு பேரவையினர் ஏற்கனவே பல உதவித் திட்டங்களை செயற்படுத்தி வந்தனர். அந்த வகையில் இடம்பெயர்ந்த நிலையிலும் உயர்தரம் கல்வி கற்கும் மாணவர்களில் 50 மாணவர்களை தெரிவுசெய்து மாதாந்தம் ரூபா 1000 வழங்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்காக வன்னி பாடசாலைகளில் கல்வி கற்கும் 50 மாணவர்களை தெரிவு செய்து 2008.11.05 ந் திகதி இச் செயல்த்திட்டத்தை கிளி/ தர்மபுரம் மகாவித்தியாலயத்தில் ஆரம்பித்து வைத்தோம்.
இது தவிரவும் பல வைத்தியசாலைகள் பாடசாலைகளில் இயங்கி வந்தன கல்வியையும் சுகாதாரத்தையும் ஒன்றாக பார்க்க வேண்டிய தேவை எமக்கு அப்போது ஏற்பட்டிருந்தது.
தொடரும் …………………………..
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-21/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-22/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-23/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-24/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-25/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-26/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-27/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-28/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-29/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-30/