வட மாகான முதலமைச்சருக்கான வேட்பாளர் மாவை ? வட மாகான முதலமைச்சருக்கான வேட்பாளர் மாவை ?

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து முதலமைச்சருக்கான வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெரிதும் எதிர்பார்ப்போடு பேசப்பட்ட முதலமைச்சருக்கான வேட்பாளர் தெரிவு ஒரு முடிவுக்கு வந்தபோதிலும் கூட்டமைப்பிலிருந்து உத்தியோக பூர்வ அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை.

கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டுக்கட்சிகளின் கூட்டத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம் பெறுவதில்லை என்ற முடிவைத் தொடர்ந்து வட மாகாண தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கூட்டமைப்பின் உயர் மட்டக் குழுவொன்று அண்மையில் புது டெல்ஹியில் இந்திய அரசுடன் சில சந்திப்புக்களை மேற்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்