ஊர்காவற்துறை வட கடல் பகுதியிலும் முல்லைத்தீவு கடற்பரப்பிலும் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களே கடற்படையின் ரோந்து நடவடிக்கையின் போது அவதானிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மீனவர்களுக்கு சொந்தமான 9 மீன்பிடி வள்ளங்களும் மற்றும் உபகரணங்களும் இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கொமாண்டோர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபை தேர்தல் நடைபெறவுள்ள இவ்வேளையில் மேலும் பல இந்திய மீனவர்கள் மீதான கைதுகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது