ஈழப்போராட்ட ஆதரவுச் செயற்பாட்டாளரும், சென்னை பச்சையப்பா கல்லூரியின் தத்துவத்துறையில் நீண்டகாலம் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான ‘ஈழநேசன்’ பேராசிரியர் பெரியார்தாசன் தனது 63வது வயதில் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 1:45 மணியளவில் சென்னையில் காலமானார்.
தமிழீழ போராட்ட அமைப்புகளுடன் நெருங்கி பணியாற்றிய இவர் தனது இறுதிக்காலங்களில் மதிமுக கட்சியுடன் இணைந்து ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்தவர்.
இவற்றுடன் இந்தியாவின் தேசிய விருதுபெற்ற `கருத்தம்மா’ உட்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் பெரியார்தாசன் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரியார்தாசன் உயிருடன் இருக்கும் போதே தனது கண்களை தானம் செய்து இருந்தார். அதே போல் பெரியார்தாசன் விருப்பப்படி அவரது உடலும் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட இருப்பதாக அவரது மூத்த மகன் வளவன் தெரிவித்துள்ளார்.