Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை மன்னார் மெத்தா நிறுவனத்தின் நான்கு வருட சேவையும், 2014ம் ஆண்டின் தைமாத நடமாடும் சேவையும்மன்னார் மெத்தா நிறுவனத்தின் நான்கு வருட சேவையும், 2014ம் ஆண்டின் தைமாத நடமாடும் சேவையும்

மன்னார் மெத்தா நிறுவனத்தின் நான்கு வருட சேவையும், 2014ம் ஆண்டின் தைமாத நடமாடும் சேவையும்மன்னார் மெத்தா நிறுவனத்தின் நான்கு வருட சேவையும், 2014ம் ஆண்டின் தைமாத நடமாடும் சேவையும்

4 minutes read

மெத்தா செயற்கை அவயவங்கள் பொருத்தும் நிலையம் இங்கிலாந்தில் உள்ள இலங்கை வைத்தியர்களாலும்  பல நலன் விரும்பிகளினாலும் 2007ல் ஆரம்பிக்கப்பட்டது. 2009 ஜப்பசி நடுப்பகுதியில் மெத்தா நிறுவனம் போரினாலும், சுனாமியினாலும், விபத்தினாலும், இயற்கையாக ஊணமுற்ற வட மாகாண மக்களுக்காக கொழும்பை தலைமைக்காரியாலயமாகக் கொண்ட பத்திற்கும் மேற்பட்ட வைத்தியர் குழாமினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

ccc

இலங்கை சுகாதார அமைச்சின் அனுமதியுடன் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஓர் நடமாடும் சேவை 2009ல் வாழ்வுதயம், Colombo Friend in need போன்றவற்றின் அனுசரணையுடன் ஒரு மாதம் அளவில் நடாத்தியது. இதன் பின் 2009 ஜப்பசி தொடக்கம் இன்றை வரை மெத்தா நிறுவனம் ஊனமுற்றோருக்கான சேவையை நடாத்தி வருகின்றது.

 

இதுவரை 2,298 ஊனமுற்றோருக்கு சேவை ஆற்றியதுடன் இதில் 1,537 ஆண்களும் 544 பெண்களும் 134 சிறுவர்களும் 83 சிறுமிகளும் பயனடைந்துள்ளனர். மேலும் நடமாடும் சேவைகளை குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் தெற்கில் புத்தளம், மாத்தறை, கண்டி போன்ற இடங்களிலும் நடாத்தி சேவையாற்றி உள்ளது.

 

பயனாளிகளின் பாதிப்பின் அடிப்படையில் நோக்குகையில் 1,745 நபர்கள் போரினாலும், 277 நபர்கள் விபத்துகளினாலும், 75 நபர்கள் பிறப்பினாலும்,      75 நபர்கள் சக்கரை வியாதியினாலும், 18 நபர்கள் புற்றுநோயினாலும,; ஏனைய பாதிப்புகளினால் பாதிக்கப்பட்ட 108 நபர்களும் பயன் அடைந்துள்ளனர்.

 

மாவட்ட அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் – 44, கிளிநொச்சி – 687,  முல்லைத்தீவு – 507, வவுனியா – 214, மன்னார் – 373, புத்தளம் – 45, திருகோணமலை – 27, மட்டக்களப்பு – 14, ஏனைய மாவட்டங்களில் மொத்தம் – 387 நபர்கள் கடந்த 4 வருடங்களிள் பயனடைந்துள்ளனர்.

 

வயது அடிப்படையில் நோக்குகையில் 10 வயதுக்கு உட்பட்ட 76 சிறார்களும்,   10 – 20 வயதுடையோர் 180 பேரும,; 21 – 30 வயதுடையோர் 541 பேரும,;     31 – 40 வயதுடையோர் 634 பேரும,;  41 – 50 வயதுடையோர் 316 பேரும,;    51 வயதுக்கு மேற்பட்டோர் 551 நபர்களும் பயனடைந்துள்ளனர்.

dddd

மேலும் ஊனமுற்றவர்களுக்கான நடமாடும் கருவிகளான 11 சக்கர நாற்காலியும், சிறுவர்களுக்கான சக்கர நாற்காலி – 04ம், மின்சார நாற்காலி – 04ம், குழந்தைகளுக்கான நாற்காலி 03ம், ஊன்று கோல்கள் 84ம், சார்பு உறுப்புக்களான 10 இடுப்புப்பட்டியும், 11 கழுத்துப்பட்டியும் இலவசமாக வழங்கப்பட்டது.

 

இரு மாதத்திற்கு ஒரு தடவை இங்கிலாந்து தலைமைக்காரியாலயத்தில் உள்ள இலங்கை வைத்தியர்களும் வெளிநாட்டு வைத்தியர்களும் மன்னாருக்கு விஜயம் செய்து மெத்தா நிறுவன ஊழியர்களுக்கான நவீன தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். அத்துடன் நடமாடும் சேவைகளிலும் கலந்து கொள்கின்றனர்.

 

மேலும் பயனாளிகளுக்கான ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு எமது சேவையின் தார்ப்பரியங்கள், பயனாளிகளின் விருப்பு வெறுப்புக்கள், வினாக்கொத்து மூலமும், தொலைபேசி மூலமும், தபால் மூலமும் பெறப்பட்டு மெத்தா தனது சேவையை நவீன மயப்படுத்தி உள்ளது.

 

2014ம் ஆண்டில் பங்குனி மாதம் அளவில் எமது இலவச சேவையை விஸ்தரிப்பதற்காக மாங்குளம் A 9 வீதியில் “லெபாற அமல உற்பவ தியாகிகள் சபையின்” ஒத்துழைப்புடன் ஓர் தொழிற்பட்டறை ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, துனுக்காய், பூனகரி பிரதேச மக்கள் பயனடையக் கூடியதாக உள்ளது.

bbb

 

மன்னார் வைத்திய சாலை பிரிவில் மன்னார், வவுனியா, புத்தளம் போன்ற பிரதேச மக்கள் பயனடைய முடியும். மேலும் தெற்கு கிழக்கில் உள்ள மக்கள் பயனடைவதற்காக மாகோ வைத்திய சாலைக்கு அருகில் ஒர் தொழிற்பட்டறை  04-01-2014ல் ஆரம்பிக்கப்பட உள்ளது.இவ் மனித நேய சேவையை விஸ்தரிப்பதன் மூலம் இலங்கையில் உள்ள       3 வீதமான ஊனமுற்றோர் பெரிதும் பயனடைய முடியும் என நம்புகின்றோம்.

aaaa

மேலும் தை மாதம் 09 – 12ம் திகதிவரை, நான்கு நாட்கள் நடமாடும் சேவை ஒன்றை, கிளிநொச்சி அரச அதிபர், திட்டமிடல் பணிப்பாளர் அனுசரனையுடன், கிளிநொச்சி கருணை நிலையம், A 9 வீதியில் நடாத்த உள்ளோம். இதில் குறிப்பாக பச்சிலைப்பள்ளி, கராச்சி, கண்டாவளை போன்ற இடங்களிலுள்ள கால்களை இழந்து செயற்கை கால்கள் தேவையான நபர்கள் பயன் பெற முடியும்.

 

மேலதிக விபரங்களுக்கு:

மெத்தா தொடர்பு அதிகாரி – 077-2131-652,

மற்றும் திட்டமிடல் பணிப்பாளர், கிளிநொச்சி – 021-2285-356, தொடர்பு கொள்ளவும்.

 

 

Peter   திரு. சின்கிலேயர் பீற்றர்

 

மெத்தா தொடர்பு அதிகாரி | மெத்தா செயற்கை அவய நிறுவனம்

பொது வைத்தியசாலை | மன்னார்,

தொ. பே.  077-2131-652

மின் அஞ்சல்: petsinclair@gmail.com

mfmannar@gmail.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More