April 2, 2023 3:58 am

எல்லா அமெரிக்கத் தீர்மானங்களும்….| இதயச்சந்திரன்எல்லா அமெரிக்கத் தீர்மானங்களும்….| இதயச்சந்திரன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

எல்லா அமெரிக்கத் தீர்மானங்களும்….

1. எம்மை ஒரு தனித்துவமான தேசிய இனம் என்று ஏற்றுக்கொள்ளவில்லை.
2. தேசிய இன முரண்பாடு பற்றி பேசவில்லை.
3. சர்வதேச சுயாதீன விசாரணையை, ஐ.நா. கொண்டுவராமல் தடுக்க முயற்சிக்கின்றது.
4. சீனாவும், ரஷ்யாவும், இந்தியாவும், இலங்கைக்கு ஆதரவாக வெளிப்படையாக செயல்படுவதால்,   அமெரிக்காவானது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கின்றது என்பதான தோற்றப்பாட்டினை இது உருவாக்குகின்றது.
5. முழு இலங்கையினது இறைமையும் ஆட்புல ஒருமைப்பாடும், ஆளும் சிங்கள தேசத்திற்குச் சொந்தமானது என ஏற்றுக்கொள்கிறது.
6. ஐ.நா.மனித உரிமை ஆணையாளர், சுயாதீன சர்வதேச விசாரணை தேவை என்று இடித்துரைத்தாலும், ‘உள்நாட்டு விசாரணை’ என்கிற பொறிமுறையை, திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது.
7. பொதுச் செயலாளர் பாண் கீ மூன் நியமித்த, நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் ‘கசிந்த’ சார்ல்ஸ் பற்றியின் உள்ளக அறிக்கை குறித்து பேசுவதில்லை.
8. இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை குறியாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது.
9. இலங்கையுடன், பகைமுரண்பாடற்ற நட்புறவினை பேணவேண்டும் என்கிற, ‘ புதிய ஆசிய- பசிபிக்  கொள்கை’ யுடன் ஒத்துச் செல்கிறது.
10. விடுதலைப்புலிகளை அடியோடு நிராகரிப்பதன் மூலம், ஈழ தேசத்தின் சுயநிர்ணய உரிமையை மறுக்க முயல்கிறது.

வீழ்ந்தவர்கள்,  எதையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று தப்புக்கணக்குப் போடுகிறது ‘உலக நாயகன்’ ஸ்தானத்தை இழந்து கொண்டிருக்கும் அமெரிக்கா.
எம் மக்கள், திங்களன்று மீண்டெழுந்ததை ஜெனீவாவில் காணவில்லையோ? மிகத்தெளிவான கோரிக்கையை முன் வைத்துள்ளார்கள்.

-இதயச்சந்திரன்-

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்