கனடிய புலம்பெயர் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட “கோன்” முழு நீள திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது, அத்துடன் இத் திரைப்படத்தில் இடம்பெறும் ‘பெண்மைக்குள் எத்தனை அழகு’ பாடலும் வெளியாகியிருந்தது. புலம்பெயர் தமிழர்களின் எதிர்பார்ப்புடன் வெளிவரும் படம் என்பதால் படத்தின் பாடலுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.
புலம்பெயர் கலைஞர்கள் மத்தியில் அண்மைக்காலமாக வளர்ந்து வரும் ஈழத்து சினிமா வளர்ச்சியில் இத்திரைப்படமும் தனது பங்களிப்பினை செய்யுமென எதிர்பார்க்கலாம்.