Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை சுமேரியர் தான் தமிழர் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 15சுமேரியர் தான் தமிழர் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 15

சுமேரியர் தான் தமிழர் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 15சுமேரியர் தான் தமிழர் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 15

4 minutes read

மனிதக் குடிப் பரம்பல் பற்றிய ஆய்வை பலர் செய்து ஆய்வுகளை வெளியிட்டுள்ளனர். மனிதன் பூரண வளர்ச்சி பெற்றதன் பின்னர் கூட கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளாக விலங்குகளை வேட்டியாடியே காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தான். இதை நான் முன்பும் கூறியிருக்கிறேன். இத்தனை காலங்களாக அலைந்து திரிந்த மாந்த இனம் நிலையாக ஓரிடத்தில் இருக்கத் தொடங்கியது தானியம் என்னும் ஒன்றை அடையாளம் கண்டதினால் தான் என ஆய்வாளர் கூறுவதை மறுக்க முடியாது.

தன் தேவைக்கு உகந்தது எனக் கண்டு எப்போது தானியத்தை விளைவிக்க முயன்றானோ அன்றிலிருந்து தான் நாகரிகத்தின் பாதையில் அடியெடுத்து வைத்தான். அதிலும் இரு நதிகளுக்கிடையில் அகப்பட்டதனாலே போராடி, தம் நிலை தக்கவைக்க அனைத்தும் அறிய முயன்று, நாகரிகத்தின் உச்சிக்குத் தள்ளப்பட்டார் சுமேரியர் என்கின்றனர்.

ancient-egypt-food-drink

மற்றைய இனம் விவசாயத்தில் ஈடுபடவில்லையா என நீங்கள் கேட்பது தெரிகிறது. மற்றைய இனங்கள் 1000, 2000, 3000 ஆண்டுகள் பின்னோக்கியே இருக்கின்றன. இது அனைத்து அகழ்வாய்வு செய்யும் பல்கலைக் கழகங்களால் நிரூபிக்கப் பட்ட ஒத்துக்கொள்ளப்பட்டதுமான கூற்று. ஒவ்வொரு நாகரிகத் தோற்றங்களின் முன்னே ஆற்றுப் படுக்கைகளும் தானியங்களும் உள்ளன.

மெசொபொத்தேமியா – கோதுமை – கிட்டத்தட்ட 8000 ஆண்டுகள்

சீனா – அரிசி – கிட்டத்தட்ட 6500 ஆண்டுகள்

தென் அமெரிக்கா – சோளம் – கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள்

இது கூட ஆண்டுக் கணக்குகள் வேறுபட்டாலும் கால இடைவெளியை யாரும் மறுக்வில்லை. தமிழர் தான் சுமேரியர் என்பதற்காக நான் வைக்கும் முதற் சான்று இந்த விவசாயம் தான். தமிழர்கள் போர்த்துக்கேயர் காலம் வரை விவசாயத்தை முதன்மை தொழிலாக மூலை முடுக்குகளிலெல்லாம் செய்து வந்தனர். ஏற்றுமதியிலும் பண்டமாற்றிலும் தன்னிறைவு கண்டு செல்வம் பெருக்கினர்.

beer

பிரித்தானியர்கள் தம் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்காக தமிழர் விழை  நிலங்களை தரிசாக்கித் தம் வியாபாரத்தைப் பெருக்கினர். அதன் பின் தமிழன் விவசாயத்தை முதன்மையாக எண்ணவில்லை. புதியனவற்றிற்கு அடிமைப்பட்டுத் தன்னிலை மறந்தமையே இன்றைய அவல நிலைக்கும் காரணம் எனலாம்.

உலக வரலாற்றை பார்த்தோமானால் ஐரோப்பியர்கள் விவசாயத்தை அக்காடியன்ஸ் என்னும் மத்திய கிழக்கு நாடுகளில் முன்னர் வாழ்ந்த இனத்திடம் கடன் வாங்கியதாக கூறப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்படும் உள்ளது. அக்காடியன்ஸ் சுமேரியரிடமிருந்து விவசாயத்தைக் கடன் வாங்கியதாகவும் மேற்குலகே ஒத்தும் கொள்கிறது. அப்படியானால் ஏன் நேரடியாகவே சுமேரியரிடமிருந்து பெற்றுக்கொண்டதாகக் கூறவில்லை. ஏனெனில் சுமேரியர் கறுப்பினம். அக்காடியன்ஸ் வெள்ளை இனம். எனவே கறுப்பினத்திடம் கடன்வாங்கியதாகக் கூறுவது அவர்களுக்கு இழுக்கு என எண்ணுவதே காரணம்.

அடுத்து தமிழர் எவரிடமும் விவசாயத்தைக் கடன் வாங்கியதாக எவருமே கூறவில்லை. தமிழரும் கூறவில்லை. எனவே விவசாயம் தமிழரின் பூர்வீகத் தொழில் என்பதனால் தொன்றுதொட்டு தொடர்ந்தே வந்திருக்கிறது. மெசொபொத்தேமியாவில் கிரீன் கொடசுக்கென பெரு விழா கொண்டாடப்பட்டிருக்கின்றது. அங்கே ஒரே ஒரு மழைக் காலம் தான் விளைச்சலுக்கானதாக இருந்ததனால் முதல் மழை பெய்யும் காலத்தை இயற்கையைப் போற்றும் காலமாகவும் கொண்டு, விழா ஐப்பசி மாதத்தில் எடுத்துக் கொண்டாடினர். அதிலிருந்து மூன்று மாதங்களில் அறுவடை செய்தனர் என கூறப்படுகின்றது.

அப்படியாயின் தை மாதம் அறுவடை முடிந்து தானியங்கள் தயாராகிவிடும். அதனால்த்தான் பின்னர் நாம் தைமாதத்தில் தைபொங்கலைக் கொண்டாடினோமா? இது பற்றிய ஆய்வுகளை மைக்கல் வூட் என்னும் அறிஞர் விரிவாக எழுதியுள்ளார்.

மெசொபொத்தேமியாவில் வாழ்ந்த மாந்த இனத்தை கெமிற்றிக் இனத்தவர் என அனைவரும் அடையாளப்படுத்துகின்றனர். ஐரோப்பிய இனத்தவரை இந்தோ யூரோப்பியர் எனக் கூறுகின்றனர். சுமேரியரைச் சூழ வாழ்ந்த வெள்ளை இனத்தவரை செமற்றிக் இனம் என வரையறுத்துள்ளனர். ஆபிரிக்க இனத்தை நீக்ரொயிட் இனம் என்று கூறுவதோடு நிறுத்திக்கொண்டு ஆபிரிக்காவின் வட பகுதியில் வாழும் கலப்பு இனத்தை இவர்களும் கெமிற்றிக் இனமாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். கெமிற்றிக் இனம் நொண்செமற்றிக் இனமெனவும் அழைக்கப்படுகின்றது.

கெமிற்றிக் இனம் என்றால் கறுப்பாக கட்டையாக குண்டாக இருப்பார்கள் எனவும், செமற்றிக் இனம் வெள்ளையாக சாதாரண உடல் வாகுடன் இருப்பர் எனவும், இந்தோ யூரோப்பியர் உயரமாகவும் வெள்ளையாகவும் இருப்பர் எனவும், உயரமாகக் கருப்பாக இருப்பவர்கள் நீக்ரொயிட் இனம் என்றும் சிக்கார்கோ,  கேம்பிரிச்,  பென்சில்வேனியா மற்றும் வேறு பல பல்கலைக்கழக ஆய்வாளர்களும் ஒத்துக்கொண்ட விடயம்.

இதில் தமிழர்கள் எந்த இனமாக இருப்பார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள். தமிழர்கள் கெமிற்றிக் இனத்துடனேயே பொருந்துகின்றனர். ஆனால் எந்த ஒரு பல்கலைக்கழமும் இதை வாய் தடுமாறியும் கூறவில்லை. அப்படிக் கூறினால் நாம் சுமேரியருடன் நெருங்கிவிடுவோம் என்பதனால் திட்டமிட்டே இதை மறைக்கின்றனர்.

நாம் கேம்பிரிச் பல்கலைக் கழகத்துக்கு இது தொடர்பான ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம். பல நாட்கள் அவர்களிடமிருந்து எவ்விதப் பதிலும் இல்லை. மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியவுடன் தாம் அதுபற்றிய ஆராட்சி செய்யவில்லை என பதில் அனுப்பினர். அப்படி மழுப்பலாகப் பதில் தரவேண்டிய அவசியம் என்ன?

 

 

தொடரும் …

 

 

Nivetha   நிவேதா உதயராஜன் | வரலாற்று ஆய்வாளர் | லண்டனிலிருந்து

 

 

இத்தொடரின் முன்னைய பகுதிகள்

 

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-introduction/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-histry-1/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-2-2/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-3/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-4/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamil-history-5/

http://www.vanakkamlondon.com/sumerian-history-6/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-7/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-8/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-9/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamil-history-10/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-11/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamil-history12/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-13/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-14/

 

(சர்ச்சைக்குரிய விடயம் ஆனால் ஆழமாகப் பார்க்கவேண்டிய வரலாறு. திரு சிவகனேஷன் அவர்களுடைய வழிகாட்டலுடன் திருமதி நிவேதா உதயராஜன் காத்திரமான ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்யார் இந்த சுமேரியர்இவர்களுடைய நாகரிக வளர்ச்சி எங்கே ஆரம்பமானதுஇவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு என்னஅப்படியானால் தமிழர் யாருடைய வழித்தோன்றல்இவற்றுக்கான விடைகளைத் தேடி விரிகின்றது இத்தொடர்

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More