எங்கும் பசுமை விரிந்து கிடக்கின்ற, இயற்கையில் அழகிய படைப்பது. பனி விழும் பொழுதில், பச்சைப் பசேலென்ற அழகிய மலைகளுக்கிடையில் கிடைக்கின்ற மன நிம்மதி, நுவரெலியாவில் மட்டுமே நம்மால் அனுமானிக்க முடியும். ‘குட்டி இங்கிலாந்து’ என்று செல்லமாக அழைக்கின்ற இயற்கையின் கைக்குழந்தை, நுவரெலியாவில் ரசிப்பதற்கு ஏராளமான இடங்கள் இருக்கின்றன.
பொதுவாக டிசெம்பர் மாதத்தில் நுவரெலியாவில் குளிர் அதிகமாக காணப்படும். ஏப்ரல் மாதத்தினை வசந்தகாலம் என்பார்கள். ஏப்ரல் மாதத்தில் நுவரெலியா மாநகரம் விழாக்கோலம் பூண்டிருக்கும். வசந்தகால நிகழ்வுகள் கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியாக இருக்கும். இதனை ரசிப்பதற்கு நாம் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.
பிற இடங்களில் இருக்கின்ற மக்கள், மனதுக்கு சாந்தி வேண்டி நுவரெலியாவுக்கு வருவார்கள். குறிப்பாக பாடசாலை விடுமுறை நாட்களை தமது குழந்தைச் செல்வங்களுடன் களித்திடுவதற்கு நுவரெலியாவை தேர்ந்தெடுப்பார்கள். டிசெம்பர் மாத விடுமுறை என்பது இங்கு மிகவும் விசேடமானது. இயற்கையில் குளிர்மையை இங்கு நன்கு அனுபவிக்க முடியும்.
பனி விழும் காலைப் பொழுதில், நுவரெலியாவின் கிரகரி ஆற்றோரமாக நடந்துசெல்லும்போது மனதுக்கு ஏற்படும் சுகத்திற்கு அளவே இருக்காது.
வசந்த கால கார்ப்பந்தயம், குதிரைப் பந்தயம் மற்றும் நிகழ்வுகளை அழகாக ரசிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் மிகவுயர்ந்த மலையான பீதுருதாலகால மலையினையும் ரசிக்க முடிகின்றமை மேலும் சிறப்பானதாகும்.
நன்றி : இன்று ஒரு தகவல் | கரை செல்வன்