புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை சமூக நோயாக உருவெடுக்கும் மாணவர்கள் தற்கொலைகள்: Dr. கே. கஜவிந்தன்

சமூக நோயாக உருவெடுக்கும் மாணவர்கள் தற்கொலைகள்: Dr. கே. கஜவிந்தன்

4 minutes read

sosaid artக்கான பட முடிவுகள்"

தற்கொலை புரியவேண்டும் என்ற தீர்மானத்துக்கு வருவது அவ்வளவு இலகுவானதில்லை. ‘என்னால் ஒன்றும் செய்ய முடியாது’ என்ற முடிவான தீர்மானமே மாணவர்களை அந்த  நிலைக்கு இட்டுச் செல்கிறது. இவ்வாறு இந்த மாணவியின் மன நிலை மட்டுமல்ல! அதிக மாணவ சமுதாயத்தின் மன நிலையும் இப்படித் தான் மாறிக் கொண்டுவருகிறது

சில சமயம் வாழ்க்கையில்(காதலில்), முதல் வகுப்பு சித்தியில், பரீட்சை எதிர்கொள்ள பயம், பரீட்சை தோல்வி என்பது  தவிர்க முடியாத ஒன்று தான் என்று அதை ஏற்றுக்  கொள்வதற்கு மாணவ சமுதாயம் தயாரில்லை. எந்தத் தோல்லியையும்  நாங்கள் தாங்கிக் கொள்ள மாட்டோம் என்ற மனநிலைக்கு நிலைக்கு இன்றைய இளம் சமுதாயத்தினர் சென்றுவிட்டனர்.

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பார்கள். அந்த அனுபவங்கள் நல்லவையாகவும் அமையலாம். கெட்டவையாகவும் அமையலாம்,. ஆனாலும் இந்த அனுபவங்கள;.பாதிப்புக்கள். தமது வாழ்கையை,ஆயுளை முடித்துக்கொள்ள வேண்டும் என எண்ணுவது நிச்சயமாக ஒரு பிழையான தெரிவாகும்.

sosaid artக்கான பட முடிவுகள்"

காதல்,பரீட்சை தேல்வி,ஏமாற்றப்பட்டுவிட்டோம் போன்ற  வலி நிறைந்த சிந்தனைகளும் அதனால் ஏறடபடும் தன்னை (Self), எதிர்காலத்தை(Future), சமூகத்தை(Society) பற்றிய பயமும்;, பாதுகாப்பின்மை காரணமாக தன்னைத்தானே கொலை செய்து கொள்கின்றனர். மாணவர்கள்  தோல்வியால் ‘நான் ஏன் வாழவேண்டும் எதைச் சாதிக்கப் போகிறேன் சமூகத்தவரின் நகைப்பிற்கும்,ஏளனத்துக்கும் இலக்காகக் கூடாது’ என்ற எண்ணம் அவர்கள் மனதில் தற்கொலைக்கு வித்திடுகிறது.இதனால் தாமே தமது உயிரை போக்கிக் கொள்ளுமளவிற்கு விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்படுபவர்கள்.

மாணவ,மாணவியரிடம் மிக வேகமாகப் பரவி வரும் தற்கொலைக் கலாசாரத்துக்கான காரணம் பெற்றோர்களது பிள்ளை வளர்ப்;புப் பாணியாகும் செல்வாக்குச் செலுத்துகிறது.. அனேக பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் ஆளுமையின் ஆற்றல்களுக்கு அப்பாலும் ,அவர்களின் விருப்பங்பகளின்றியும். தங்களது பிள்ளைகளிடம் நீ டாக்டராக வேண்டும், இஞ்சினியராக வேண்டும் என்று தங்களது விருப்பங்களுக்கேற்ப எதிர்பாப்பினை தங்களிடமும்,அவர்களிடமும் வளர்த்துக் கொள்கின்றனர்.பிள்ளைகள் தங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை எனும் போது அவர்கள் மீது கோபப்பட்டு எரிந்து விழுகின்றார்கள்.

இதைத் தாங்க முடியாத பிள்ளைகள் வாழ்கையே முடிந்துவிட்டதென தற்கொலைக்கான முடிவெடுக்க ஒரு காரணமாக அமைகிறது.ஆனால் மாணவ,மாணவியரிடம் உருவாகியுள்ள தற்கொலைக் கலாச்சாரத்திற்கு அவர்களை மட்டும் நாம் பொறுப்பாக்கி விட முடியாது மாணவர்கள்  மன அழுத்தம (Stress),மனச்சோர்வு(Depression) ஏற்படும் போது அதற்குத் தற்கொலை தான் தீர்வு என்ற முடிவுக்கு ஏன் வருகின்றார்கள் என்பதற்கு  இன்னொரு முக்கிய காரணம் இதற்கு ஒரு முன் மாதிரி(Model) இருந்ததால் தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும், சமுதாயத்தில் ஆண் பெண் என்று வித்தியாசம் பார்க்காமல் இது போன்ற உளப்பிரச்சினையின்  போது தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த முன் மாதிரியை மாணவர்கள் கடைப்பிடிக்கின்றார்கள்இகைக் கொள்கின்றார்கள்.

மாணவ, மாணவியர் தாங்களாக தற்கொலையை தீர்வாக கண்டு பிடித்துவிடவில்லை.சமுதாயத்தில் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டவர்களும்; தான் காரணம், எனும் போது மாணவ சமுதாயத்தை மட்டும் பொறுப்பாக்குவது எந்த வகையில் நியாயம்? முதல் இதற்கு பொறுப்பாளர்கள் சமுதாயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் தற்கொலையாளிகளும்தான்  என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மேலும் தற்கொலையை முடிவாக்கி,உயர்திக் காட்டும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவையாகும் தற்கொலைகளை அதிகரிக்கச் செய்கின்றன.கிராமப்புறங்களில்; தற்கொலைகள் எங்கேனும் ஒன்றிரண்டு நடக்கும். அதுவும் பூட்டிய வீட்டின் அறைக்குள் நடக்கும். அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் தொங்கும் உடலைக் கீழே இறக்கி, அதனை சரியான வகையில் கையாண்டு விடுவதால்,இது சமூகத்தில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

happy life artsக்கான பட முடிவுகள்"

ஆனால் இன்று திரைப்படத்திலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் இந்தக் காட்சிகள் சர்வசாதாரணமாகக் காட்டப்படுகின்றன.காதல் தோல்வி என்றதும் காதலன் அல்லது காதலி அல்லது இருவரும் இணைந்து மலை உச்சியிலிருந்து கீழே விழுதல்இ விஷம் அருந்துதல், கயிற்றில் தொங்குதல் போன்ற காட்சிகள் திரும்பத் திரும்பக் காட்டப்படுகின்றன. இதைப் பார்க்கும் உளமுதிர்சி உள்ளவர்களே இதற்குப் பலியாகி விடுகின்றார்கள் எனும் போது  மனவெழுச்சி,உணர்சி கொந்தளிப்புள்ள பருவ வயது மாணவர்கள் சர்வ சாதாரணமாக இதனை மேற்கொள்கின்றார்.

சில பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்கொலை செய்து கொள்வதாகக் காட்டப்படும் போதுஇ அது அவர்களின் மனங்களில் மிக எளிதாகவும், ஆழமாகம் பதிந்து விடுகின்றது. தற்கொலையைப் புகழும் கதைக் கலாச்சாரம் தொடரும் வரை தற்கொலைக் கலாச்சாரமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். கதையாவது ஒரு குறிப்பிட்ட எல்லையில் நின்று விடுகின்றது. ஆனால் சினிமாப் படங்கள் அதை பலவழிகளிலும் பெரிதாக்கி விடுகின்றது.அதைப் பார்ப்பவர்கள்இ வெகு விரைவாக அதில் ஈர்க்கப்பட்டு விடுகின்றார்கள்.இது தற்கொலைகள் நடப்பதற்கு மிக முக்கியமான காரணமாகும்.

happy life artsக்கான பட முடிவுகள்"

தற்கொலை செய்வதற்கு ஒரு துணிவு வேண்டும். அந்த துணிவு மனிதன் விரக்தியின் எல்லைக்கு போகும் போது உருவாகிறது. சுயமாக சிந்திக்க முடியாத மனநிலையும் அதற்கு காரணம். தான் சமூகத்தில் ஏமாற்றப்பட்டுவிட்டேன்’ என்ற கருத்து அவர்களை மேலும் வாழ்வதில் பயனில்லை என்ற மாற்றமுடியாத மனநிலைக்கு வரச்செய்கிறது. உளவியல் ரீதியாக பாதிப்படைந்தவர்கள் உணர்ச்சி கொந்தளிப்பால் சரியான முடிவெடுக்க முடியாத இச் சூழ்நிலையில் சிந்தனை வட்டம் குறுகி இவ்வாறான முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஆகவே அவர்களை அடையாளம் கண்டு, தக்க ஆலோசனைகளும் அறிவுரைகளும் நல்கி அவர்கள் எண்ணங்களை மாற்றுவது அவசியம்.இதை சரியான வகையில் இனம் கண்டு அதன் அடிப்படைகாரணிகளை களையாவிட்டால் இது ஓர் சமூக நோயாக உருவெடுத்து சமுதாயம் சீரழிவதுடன் தற்கொலை செய்பவரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு போவதை தவிர்க்க முடியாது.

Image may contain: 1 person, suit

Dr.K.Kajavinthan, Senior Lecturer in Psychology, University of  Jaffna

தொடர்புகளுக்கு- kajavinthan@gmail.com

happy life artsக்கான பட முடிவுகள்"

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More