Sunday, November 29, 2020

இதையும் படிங்க

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்

தம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 6 | பத்மநாபன் மகாலிங்கம்

தம்பையரின் இழப்பை விசாலாட்சியினால் தாங்க முடியவில்லை. அவள் பழையபடி இயங்க மிகவும் கஷ்டப்பட்டாள். கணபதியும் சோர்ந்து போய்க் காணப்பட்டான். தம்பையர் கணபதியின் எதிர்காலத்தைப் பற்றி...

மொகல் ஈ ஆஸம் | திரைக்கு பின்னால் மகத்தான காதல்

மொகல் ஈ ஆஸம் - திரைக்கு பின்னால் நடந்த மகத்தான காதல் ( தோல்வி) கதை

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 5 | பத்மநாபன் மகாலிங்கம்

கொல்லனாறு, நீலனாறு என்பவை காட்டாறுகளாகும். பெரிய பரந்தன் விவசாயிகள் இந்த காட்டாறுகளை மறித்து அணை கட்டி, வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்கு நீர் பாய்ச்சினர். கால போகத்தின் போது மழை நீரும்,...

கொரோனாவால் ட்ரம்ப் கடுமையாக பாதிக்கப் பட்டால் என்ன நேரும்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 4 | பத்மநாபன் மகாலிங்கம்

வனம் அதிக வளங்களைக் கொண்டது. விலங்குணவு சாப்பிடுவோருக்கு உடும்பு, முயல், பன்றி, மான், மரை, கௌதாரி, காட்டுக்கோழி, காடை, மயில் என்று பலவற்றின்...

ஆசிரியர்

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா ?? –  ராஜி பாற்றர்சன்   

இலங்கை தீவு சுற்றுலா பயணிகளை கவரும்  ஒரு அழகிய  தீவு மட்டுமல்ல, பல வளங்களை தன்னகத்தை கொண்ட அருமையான ஒரு தேசமாகும். நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தம்மிடம் வைத்துள்ள சிங்கள பௌத்த அரசு, சிறுபான்மையான தமிழர்களை திட்டமிட்ட வகையில் அழித்தொழிக்கும் இனவழிப்பை கட்டவிழ்த்து விட்டு, அதில் வெற்றியும் கண்டது.   பல ஆண்டுகளாக தமிழினத்தை அடிமைப்படுத்தி இனபேதத்தை உருவாக்கி, நிம்மதியாக தமது சொந்த தேசத்தில் வாழ வேண்டிய தமிழினத்தை  ஏதிலிகளாக்கியது மட்டுமன்றி, மிலேச்சத்தனமான முறையில் அவர்களை கொன்றொழித்து வந்தது.   பல ஆயிரக்கணக்கானவர்களை காணாமல் ஆக்கி உளவியல் ரீதியாக முடக்கி வைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

ஐக்கிய நாடுகள் பொது சபையின் இனப்படுகொலை குற்றத்தை  தடுக்கும் மற்றும் தண்டிப்பதற்கான மாநாடு பற்றிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் ஐந்து  விடயங்களில் ஏதேனும் ஒன்றை நிரூபிக்கும் பட்சத்தில் இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை என நிரூபிக்க முடியும். இனப்படுகொலை என்பது ஒரு தேசிய, இன, அல்லது மதக் குழுவை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றாகும்.  அதில் முதலாவதாக ஒரு இனத்தை சேர்ந்தவர்களை கொலை செய்தல்,  இரண்டாவதாக ஒரு இனத்தை சேர்ந்தவர்களுக்கு  உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தீங்கிழைத்தல்.

மூன்றாவதாக  ஒரு இனத்தினுடைய வாழ்க்கை முறைகளில் வேண்டுமென்றே முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ  அழிவை அல்லது குழப்பத்தை ஏற்படுத்துதல்.நான்காவதாக ஒரு இனத்தின் இனவிருத்தியை திட்டமிட்ட வகையில் தடுத்தல்.  ஐந்தாவதாக   ஒரு இனத்திற்குரிய   குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறு இனத்திற்கு  மாற்றுவது போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  மேற்குறிப்பிட்ட  விடயங்களில் ஒன்றை நிரூபித்தாலே, தமிழ் ஈழத்தில் நடை பெற்றது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும்.

1956-ம் ஆண்டில் இருந்து பல வழிகளில் தமிழரை அடிமைப்படுத்தும் முகமாக செயற்படுத்தப்பட்ட முயற்சியின் உச்சகட்டமாக 1983-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசால்  வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது .   அதன் கோரத்தாண்டவத்தால் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் “தமிழர்” என்ற ஒரே காரணத்திற்காகவே  ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.  அந்த காலப்பகுதியில்   இருந்து தொடர்ச்சியாக அப்பாவிப்  பொதுமக்கள் மட்டக்களப்பு, அம்பாறை,  வவுனியா, மன்னார் மாவட்டங்களில் அநியாயமாக கொலை செய்யப்பட்டதுமன்றி, பல வழிகளில் துன்புறுத்தப்பட்டனர்.  அந்த குரூர சம்பவங்களின்   சாட்சிகள் இன்றும் நீதி கிடைக்கப் பெறாமல்  உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 அதனை தொடர்ந்து தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும்  இடையில் நடைபெற்ற யுத்தத்தில், இலங்கை அரசாங்கத்தினால் மிலேச்சத்தனமாக பொதுமக்கள் வாழ்விடங்களையும், பாடசாலைகளையும், வைத்தியசாலைகளையும் இலக்கு வைத்து வீசப்பட்ட குண்டுகளிலும், எறிகணை வீச்சுகளிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.   வெள்ளை வானில் கடத்தப்பட்டு   காணாமலாக்கப்பட்டவர்களும், இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள்  படிப்பு, வேலை நிமித்தமாக சென்றபோது, கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் உண்டு.  இது எல்லாவற்றையும் விட 2009-ல் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் அவலம்  இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்ட வகையில் ஒரு சிறிய நிலப்பகுதிக்குள் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதுகாப்பு வலயம்  என அறிவித்து, அதற்குள்  சட்டவிரோதமான குண்டுகளை வீசி, நாற்பதாயிரத்திற்கும் அதிகமான மக்களை கொன்றொழித்தது.  இது ஒரு கொடூரத்தின் உச்ச கட்டமாகும்.

ஒரு அரசாங்கம் தான் பாதுகாக்க வேண்டிய தமது குடிமக்களை, பாதுகாப்பு பிரதேசம் என நம்ப வைத்து, அதற்குள் வர வைத்தது மட்டுமல்ல, அவர்களுக்கு போதிய உணவுப் பொருட்களை அனுப்பாது பட்டினி சாவுக்கு வழிவகுத்தது. கொத்து குண்டுகளை வீசி மருந்து  பொருட்களை தடை செய்து திட்டமிட்டு அப்பாவி தமிழ் மக்களை  கொன்றொழித்தது. போதிய அடிப்படை வசதி இன்மையால் தொற்று   நோய்களுக்கு உள்ளாகி, கொட்டும் மழைக்குள் அவதியுற்ற அப்பாவி மக்களை ஆட்லறி எறிகணைகளாலும், கிபிர் குண்டுத்தாக்குதல்களாலும் ஈவிரக்கமின்றி படுகொலை  செய்ததற்கும், உடல் அவயங்களை இழக்க செய்ததற்கும் என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்?

  மேற்குறிப்பிட்ட  தொடர்ச்சியான திட்டமிட்ட ஒரே இனத்திற்குள் நிகழ்த்தபட்ட மனித படுகொலைகள், உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியமை, ஒரு இனத்திற்கான ஒரு இயல்பு நிலை வாழ்வை சிதைத்து வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்திய காரணிகள் இனப்படுகொலை என்கிற விடயத்துக்குள் அடங்குகிறது.    அப்படியிருந்தும் ஏன் சில தமிழர்கள் உட்பட பல சர்வதேச அமைப்புகள் இலங்கையில் நடந்தது ஒரு இனவழிப்பு என ஏற்றுக் கொள்ளவில்லை?

80களில் நிரூபிக்கப்பட வேண்டிய விடயம் ஏதேதோ காரணங்களால் தவற விடப்பட்டதுமின்றி,  2009-ல் பல சாட்சிகளை கொண்டிருந்தும் முன்னெடுக்கபடாதது கவலைக்குரிய விடயமே.  இதன் காரணத்தை அலசி ஆராய்ந்து பார்த்தோமானால் தமிழர்களுக்கு இனப்படுகொலை பற்றிய போதிய அறிவு இன்மையும், அதை எப்படி நிறுவுவது என்கிற விழிப்புணர்வு இன்மையும் அந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிய ஒரு குழுவை அமைத்து போதிய தெளிவை பெற்று சரியான வேலை திட்டத்தை  வகுக்காததையும் காரணங்களாக கொள்ள முடியும்.

ஒரு நீதிமன்றில் நாம் குற்றவாளியை நிரூபிக்க போதிய சாட்சிகளை வழங்க வேண்டும்.  அப்படி இல்லாவிட்டால் நீதிபதிக்கும் ஊர் உலகத்துக்கும் அந்த குறிப்பிட்ட நபர் குற்றவாளி என தெரிந்திருந்தாலும், போதிய சாட்சிகள் இல்லாவிட்டால் வழக்கையே தள்ளுபடி செய்து விடுவார்கள். இதுதான் நிதர்சனம். இது இப்படியிருக்க, தமிழர்கள் தேவையான சாட்சிகளை வழங்கி நடந்தது இனப்படுகொலையே என ஒருமித்த குரலோடு நிரூபிக்க என்ன முயற்சி மேற்கொண்டுள்ளோம்?   ரோஹிங்கிய மக்கள் ஆயிரக்கணக்கான வழக்குகளை பதிவு செய்தது மட்டுமன்றி தம்முடைய பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபையின் அதியுயர் நீதிமன்றுக்கு கொண்டு சென்று தமது குரலை ஓங்கி ஒலிக்கவைத்து உலகத்தை திரும்பி பார்க்க வைத்தார்கள். உலகமெங்கும் பறந்து வாழும் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் எத்தனை வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்?    இதிலிருந்து தமிழர்கள் சரியான ஒரு திட்டம் வகுத்து எந்த ஒரு வேலைத்திட்டத்தினையும் காத்திரமாக முன்னெடுக்கவில்லை என்பது நிதர்சனமாகிறது.

ஒவ்வொரு சாக்கு போக்குகளை சொல்லிக் கொண்டு சரியான வேலை திட்டத்தை வகுக்காது, வெறும் பேச்சளவில் மட்டும் பல காரியங்கள் நின்று விடுவதால் தமிழர்கள் பாரிய பின்னடைவை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள்.  தமிழர்களே தமக்கு நடந்தது இனப்படுகொலை  அல்ல என ஏற்க மறுப்பதுவும், அதனையே பிரச்சாரம் செய்வதுவும்  தமிழினத்திற்க்கு எதிரான ஒன்றாகவே மாறியிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஐக்கிய நாடுகள் ஏற்றுக் கொள்ளும் வரையறைக்குள் முதல் மூன்று விடயங்கள் தமிழ் மக்களுக்கு நடந்தேறியது, அதில் உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி, அவர்கள் அன்றாட வாழ்வை சீர்குலைக்கும் செயல்கள் இன்றும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதற்கு உதாரணமாக சொந்த காணிகளை மக்களுக்கு வழங்கி, அங்கு குடியேற அனுமதிக்காமல் அவர்கள் அல்லாடவிட்டமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள்  விபரம் தொடர்பாக அவர்கள் குடும்பங்களுக்கு   அறிவிக்காமல் அந்த குடும்பங்களை உளவியல் ரீதியாக சிதைத்து கொண்டு வருவது போன்ற விடயங்களை குறிப்பிடலாம்.   தமிழர் வாழும் பகுதியில் மாத்திரம் 80%குமதிகமான இராணுவத்தினரை குவித்து வைத்துள்ளமை மட்டுமன்றி, புதிய புதிய சோதனை சாவடிகளை உருவாக்கி வருகின்றமை எதை குறிக்கிறது?

தமிழர்களாகிய நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை சிந்திக்க வேண்டிய காலத்தில் தற்போது இருக்கின்றோம். துவண்டதில்  இருந்து மீண்டெழுந்து   அறிவுப் பூர்வமாக எம்மினத்தின் விடிவுக்காய் உரிமைக்காய் செயல்பட வேண்டிய நேரம் இது. “எழுந்திருங்கள்! உறுதியுடனும் தைரியத்துடனும் இருங்கள். பொறுப்பு முழுவதையும் உங்கள் தோள்களிலே சுமந்து கொள்ளுங்கள். உங்களின் விதிக்கு நீங்களே காரணம் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.” என்கிற சுவாமி விவேகானந்தாவின் வாக்கினை நினைவுபடுத்தி, புதிய நம்பிக்கையுடன்  நம்பாதம் பதிப்போம்.  வரலாறு படைப்போம்.   நாளை நமதே !!

  ராஜி பாற்றர்சன்  (கனடா)

 

இதையும் படிங்க

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 12 | பத்மநாபன் மகாலிங்கம்

அன்று காலை ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் வீட்டிற்கு வெளியே வந்து நின்று பார்த்தனர். முன்பு எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று காட்சியளித்த பெரிய பரந்தன் இப்போது மஞ்சல் போர்வை விரித்தாற் போல...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 11 | பத்மநாபன் மகாலிங்கம்

பெரியபரந்தனில் தனிப் பெண்ணாக தான் இருக்கிறேன் என்று எந்த சந்தர்ப்பத்திலும் விசாலாட்சி நினைக்கவுமில்லை, கவலை கொள்ளவும் இல்லை. வந்து குடியேறியவர்கள் அவரது உறவினர்களும், தம்பையரின் உறவினர்களும் தான். ஆனால் கணபதி...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 10 | பத்மநாபன் மகாலிங்கம்

பெரிய பரந்தன் காடாக இருந்த போது பனை மரம் எப்படி வந்தது? என்று பலர் கேட்டார்கள். பெரிய பரந்தன் காட்டை வெட்டும் போது...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 9 | பத்மநாபன் மகாலிங்கம்

பெரிய பரந்தனில் இறங்கிய மறு நாளிலிருந்து விசாலாட்சியும் கணபதியும் ஊர் வாழ்க்கையுடன் ஒன்றி விட்டனர். காலை எழுந்தவுடன் விசாலாட்சி வீடு கூட்டி, முற்றம் கூட்டி விட்டு, 'பூவலுக்கு' போவாள். பனை...

மறக்க முடியாத யாழ் இடப்பெயர்வு | ஒக்ரோபர் 30,1995 | 25 வருடங்கள்

அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 8 | பத்மநாபன் மகாலிங்கம்

திருமணத்தின் அடுத்தநாள் விசாலாட்சி அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வந்து, காலை உணவிற்காக கஞ்சியும், மத்தியானத்திற்கும், இரவிற்கும் கட்டு சாதமும் செய்ய ஆரம்பித்தாள். ஆறுமுகத்தையும் அவரை அணைத்தபடி படுத்திருந்த கணபதியையும்...

தொடர்புச் செய்திகள்

உலகம் இயல்புக்கு திரும்பும் நம்பிக்கை இல்லை! கைவிரித்த உலக சுகாதார ஸ்தாபனம்

பொது சுகாதார வழிகாட்டல் பின்பற்றாவிட்டால் கொரோனா தொற்றுநோய் நெருக்கடி மேலும் மிக மோசமானதாக மாறும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுடன் பல நாடுகள் தொடர்ந்தும் கடுமையாக போராடி...

இனப்படுகொலையின் நீதிக்காக உழைப்பது படித்த சமூகத்தின் கடமையல்லவா? அரச ஊழியர் சமூகத்தின் கோரிக்கை

தமிழர் மண்ணில் ஒரு மகத்தான விடுதலைப் போராட்டம் நடந்திரா விட்டால் இன்றைக்கு நம்மில் பலர் அழிக்கப்பட்டிருப்போம். கருவிலேயே இல்லாமல் செய்யப் பட்டிருப்போம். தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் ஆயுதம் தாங்கி ஒரு போராட்டத்தை...

இருதயத்தில் வீசும் புக்காரா குண்டுகள்! இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்! தீபச்செல்வன்

இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு

ஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். Buenos Airesஇல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்...

மோதலில் ஈடுபட்ட யாழ். பல்கலை மாணவர்களுக்கு தண்டனை!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால் முன்மொழியப்பட்டு,...

ஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலா | வெளிவந்த வைரல் வீடியோ!

பிக்பாஸ் 4வது சீசனில் காதலர்களாக இன்னும் யாரும் உருவாகவில்லை. ஆனால் பாலா-ஷிவானி இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றினாலும் இருவருக்குள்ளும்...

மேலும் பதிவுகள்

பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு கொரோனா

வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்...

கல்யாணராமன் பிரபு தேவாவின் புது திருமணம் | உறுதி செய்த ராஜூசுந்தரம்

நடிகர் பிரபு தேவா, பிசியோதெரபிஸ்ட் ஹிமானியைக் கடந்த மே மாதம் திருமணம் செய்துள்ளார். 1994 இல் இந்து படத்தின் மூலமாக...

கொரோனா தடுப்பு மருந்தை எடுத்து கொள்ளும் கடைசி நபராக நான் இருக்க விரும்புகிறேன் | சத்குரு

மக்கள் நலனுக்காக தங்களின் உயிர்களை பணயம் வைத்து சேவையாற்றி வரும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தான் முதலில் கொரோனா தடுப்பு மருந்தை...

மறு அறிவித்தல் வரை கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் முடக்கம்!

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை(24) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில்...

அமெரிக்காவில் சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம்

உலக புகழ்பெற்ற ஹார்வெர்ட் மருத்துவப் பள்ளியின் (Harvard Medical School) கீழ் இயங்கும் பெத் இஸ்ரேல் மருத்துவ மையத்தில் (Beth Israel Deaconess...

நியமனத்தில் அநீதி! | வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளின் கோரிக்கை!

பட்டதாரிகள் நியமனத்தில் நிராகரிக்கப்பட்ட வெளிநாட்டு பட்டதாரிகள்  தங்களுக்கான நியமனத்தை வழங்குங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.  இலங்கை வெளிநாட்டு பட்டதாரிகள்...

பிந்திய செய்திகள்

மாவீரர் நாள் 2020 | நிலாந்தன்

நினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...

கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்

யாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...

கொழும்பு அணியின் 2 ஆவது வெற்றி | கண்டி அணியின் 2 ஆவது தோல்வி

இலங்கையில் தொடங்கப்பட்டுள்ள எல்பிஎல் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப் போட்டி தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட சிறப்பு பதிவு...

இன்று தமிழரின் சிறப்பு விழா கார்த்திகை தீபம் | கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?

தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் தான் கார்த்திகை விளக்கு திருவிழா இன்றாகும். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு...

மாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...

தனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...

துயர் பகிர்வு