Saturday, August 8, 2020
- Advertisement -

TAG

கவிதை

தோழி | கவிதை | தமிழ்

கவிதையில் அடக்கமுடியாகவிதை நீநிறங்களில் நிறையாநிறம் உனதுகுணங்களில் நீமட்டும் வேறுபட்டவள்சிறுகுறை சொல்லதெரியாத சிறுமியேவயதானாலும் நட்பில் நாம்பால்யத்திலே வாழ்கிறோம்காமமில்லா நட்புக்குநாம் இலக்கணமானோம்இலக்கணபிழை நமக்கில்லையடிசிறு சண்டையோ பெரும்...

ஊடல் | கவிதை | உமாபாரதி

என் கலிதீர்க்க வந்தவளேஎன் ஆசை மகளேஉன்னுடனான ஊடல்காமத்தில் சேர்ந்ததல்லஉதிரத்தில் உருவாகிஉணர்வாகிப்போனதுஇலை கொண்ட பனியல்லஇமை கொண்ட கண்ணதுமடிகொண்ட சுமைமனம் கொண்ட சுகமானது!!!

கவிதை | நெஞ்சுக்குள் தரிசனம்! | சண்முக பாரதி

எங்கள் பண்பாட்டின் ஆன்மீக அடையாளமாய் நிமிர்ந்த நல்லூர் முருகா! நின் பெருந்திருவிழா அழகில் நெஞ்சு நிமிரும் நாளுக்காய் காத்திருந்தோம் இன்று நின் தரிசனம் காண அடையாள அட்டை இன்னுமின்னும் பற்பல நிபந்தனைகள் அந்தக் கிருமிக்கு அவ்வளவு வல்லமையா… 650 பேர் சோதனை செய்து 300 பேருக்கு...

கவிதை | கிருத யுகத்தின் கவிஞன் | வ.ஐ.ச.ஜெயபாலன்

* காவியங்கள் பேராபத்துக்களை உதைத்து வரமான வாளொடு நிமிர்ந்த மாவீர்கள் பற்றியதே. ஆனாலும், எங்கள் காவியம் வேறு. அது, கொரோனா கொள்ளையர் மிரள சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொல் புதிதாய், சோதியுடன் சிறகசைகிற எங்கள் கவிஞன். மனுஷ்ய புத்திரன் பற்றியது. * அவன் கொரோனாவின் பொறியில் விழ்த்தப்பட்டது...

தகப்பன் தின்னிகள் – சண்முகபாரதி

  ஆடியமாவாசை… பிண்டமாய் போன அப்பாவுக்கு கண்ணீரில் எள்ளுத் தண்ணி இறைத்த என் இடம் நிரப்ப வருவான் ஒரு பாலன்…. அப்பா பெயர், நட்சத்திரம் மழலையாய் உதிரும் இந்த வயதில் இவனுக்கு ஆடியமாவாசை எந்தன் கண்ணீரும் உறையும் ‘தகப்பனைத் தின்னி’ பிள்ளையின் எள்ளுத் தண்ணீராய் கண்ணீரைத் தந்தபடி கூட இருந்த தாய் விளக்கம்… ‘அவர் காணாமல் போகையில் இவன் வயிற்றில்… தேடுறம் தேடுறமெண்டு… இனித்...

கவிதை | அவள் ஒரு கவன இசை | த. செல்வா

  அன்பே நான் பயணப் படுகையில் 'கவனமாய் பார்த்து வா' என்கிறாய் கவனம் என்ற சொல்லில்தான் வாழ்வின் ஆயுள் சுழல் வதை அறிவேன் நான் கவனத்தைச் சூடுதல் சுகங்களின் தொடக்கம் கவனத்துக்கும் நமக்கும் கவனம் பற்றிய தவிப்புக்கள் ஏராளம் கவனமா படி கவனமா...

கவிதை | தீர்வாம் தேர்தலாம் | பா.உதயன்

  கடைசி ஆயுதத்தையும் ஐயா கையில எடுத்துப் பார்த்தார் சமரச அரசியலோடு சமாதானம் வரும் என்று சிங்கக் கோ(கொ)டியை உயர்த்திப் பிடித்தார் ஐயா பாவம் இப்போ வெறும் கையோடு நிற்கிறார் அடுத்த தேர்தலைப் பார்த்தபடி அது சரி அவன் கொடுத்தா தானே ஐயாவும் வேண்டித் தருவார் சும்மா சொல்லுங்கோ ஐயா தீபாவளிக்குள் தீர்வு கிடைக்கும் என்று பாவம் சனம் நம்பி வந்து வாக்குப் போடும் ஏமாந்தே பழகப்பட்ட சனம் நாங்க ஐயா இந்தியா வரும் என்றே இருந்த சனங்க நாங்க ஐயா ஆன அவனும் இவனும் முழுசா தின்று முடிச்சான் முள்ளிவாய்க்காலை ஐயா இன்னும் ஒரு முறை ஏமாறுவதில் என்ன குறை ஐயா புலிகள் போனால் சமாதானம் வரும் என்ற சனத்தையும் சந்திச்சுப் பாருங்க ஐயா மாற்று வழி ஏதும் கேட்டுப் பாருங்கோவன் மசியுமா சிங்களம் என்று. பா.உதயன் 

கவிதை | பாடலற்ற நிலம் | தீபச்செல்வன்

நாங்கள் கனவழிக்கப்பட்ட மக்கள் நாங்கள் வாழ்வு அழிக்கப்பட்ட மக்கள் நாங்கள் நாடழிக்கப்பட்ட மக்கள் இப்பொழுது நாங்கள் கொடியும் பாடலும் அற்ற மக்கள். எங்களுக்கு ஒரு கனவு இருந்தது எங்களுக்கு ஒரு வாழ்வு இருந்தது எங்களுக்கு ஒரு நாடு இருந்தது அப்பொழுது எங்களுக்கு ஒரு...

கவிதை | அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறையும் சுடுமணல் | தீபச்செல்வன்

இலைகொட்டிய அலம்பல்களில் குந்துகிறது துரத்தப்படும் கூரை. களப்புவெளியின் சகதிக்குள் புதைந்துவிட்ட ஒற்றைப் பேருந்துக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைகளை தேடுகின்றன கொத்துக் குண்டுகள். ஒற்றை புளியமரத்துடன் வெளித்துக்கிடக்கிறது மாத்தளன். விமானங்கள் குவிந்து எறியும் குண்டுகள் விழப்போகும் அறிவிக்கப்ட்ட பாதுகாப்பு வலயத்தில் நிறையும் சுடு மணலில் ஓடும் குழந்தைகளின் பாதங்கள் வாடிப்புதைந்தன. பனைகளுக்கிடையில் படருகிறது கந்தக...

காதல் கொண்டேன் காவியமே: பா.உதயன் கவிதை

  கண்ணே நீ என் அருகிருந்தால் கனவென்றொன்று வருவதில்லை என் கண்ணில் உந்தன் நினைவிருந்தால் கண்கள் என்றும் நனைவதில்லை   என்னோடு உந்தன் முகம் இருந்தால் எனக்கு என்றும் தனிமை இல்லை என்னுள் உந்தன் உயிர் இருந்தால் எந்தன் மூச்சு நிற்பதில்லை   ஊரும் நதி போல் நீ இருந்தால் என் உள்ளத்தின் ஈரம் காயாது தூவும் மழையாய் நீ வந்தால் துன்பம் கூட விலக்குமடி   வானில் நிலவாய் தெரியுதங்கே உன் வட்ட முகத்தின் ஒளி அழகு காலை வந்த பூக்களிலும் கண்டேன் உந்தன் கவி அழகு   அழகே தமிழே என் மொழியே அந்த நதியில் துயிலும் வெண் நிலவே என் கவியில் உயிர்த்த கற்சிலையே காதல் கொண்டேன் காவியமே.   பா.உதயன் ✍️

கவிதை | உயிர்த்த ஞாயிறு – 2020 | நிலாந்தன்

உயித்தெழுந்த போது கிறீஸ்து முரட்டுத்துணியாலான மாஸ்க் அணிந்திருந்தார் தோமஸ் திருக்காயங்களைச் சோதிக்கமுன்னும் பின்னும் கைகளைத் தொற்று நீக்கியால் கழுவினான் பூமியின் பாரம் குறையலானது நாடு முதியவர்களை நாய்களைப் போல சாக விட்டது சைரனும் சேமக்காலை மணியும் ஒலிக்காத பொழுதுகளில் இத்தாலியர்கள் ஆளரவமற்ற தெருக்களை இசையால் நிரப்பினார்கள் கள்ளத் தீர்க்கதரிசிகள் ஓடியொளித்த காலமொன்றில் மருத்துவர்களே சமூகத்தின் பேச்சாளர்களாக மாறினார்கள் காற்றைப் பட்டங்கள்...

கவிதை | நஞ்சுண்ட வீரம் | தீபச்செல்வன்

ஓரினத்தை அழிக்கும் யுத்தத்தில் சுற்றி வளைக்கப்பட்ட களமொன்றின் ஈற்றில் நஞ்சை ஆயுதமாக்க உயிரை வேலியாகினர் போராளிகள் வெற்றியடைந்த எண்ணற்ற சமர்களின் கதைகளை அலங்கரிக்கும் கனவு வீரர்களின் கருணையான முகத்தை அன்புறைந்த வார்த்தைகளை சனங்களுக்காய் களமாடும் வீரத்தை கடக்க முடியா நஞ்சு தன்னலமற்று நஞ்சருந்திய போராளிகளின் கனவுகளால் பச்சை நிறமானது...

கவிதை | கொரோனாவை தாண்டி | வ.ஐ.ச.ஜெயபாலன்

*. மலர்கிறது முல்லை கமகமவென சுவர்க்கமாய் உயர்கிறதே என் மாடித்தோட்டம். கிருமியை அஞ்சி ஊரடங்கிய சென்னையின் மரண அமைதி அதிர கருவண்டுகள் இசைக்கிறது ”அஞ்சாதே தோழா” என்னும் பாடல். * அமேசன் காட்டுத் தீயையும் மிஞ்சி உலகை வேட்டையாடுதே கொரோனா . அடாது கொட்டும் வெண்பனியையும் விழாவாய் கொண்டாடும் ஒஸ்லோ நகரும்...

கவிதை | அஞ்சற்க மனிதா | பா.உதயன்

இருண்டு கிடக்கும் உலகம் மெளனங்களோடு மட்டும் பேசிக்கொண்டிருக்கிறது அதன் அழகிய மொழிகளை தொலைத்து விட்டு ஒளிந்து கொள்ள இடம் தேடியபடி மனிதன் அலைகிறான் அவன் இசைத்த பாடல்களை எல்லாம் திண்டு கொண்டிருக்கின்றன கண்ணுக்கு தெரியாத வைரசுகள் பறவைகள் பாடவில்லை பூக்கள் பூக்கவில்லை காலை ஒரு கணம் விடிய மறந்தது காலம் தெரியாமலே மரங்களில்...

கவிதை | அம்மா | பா.உதயன்

கல்லிலும் தெய்வம் கண்டேன் உன்னிலும் தெய்வம் கண்டேன் உன்னிலில் கண்ட தெய்வம் உயிருக்குள் நின்றதம்மா உன்னிலே என்னைக்கண்டேன் கல்லிலே உயிர்த்திருக்கும் கடவுளாய் உன்னைக்கண்டேன் கடவுளை விடவும் பெரிது கருவிலே சுமந்த தெய்வம் கண்ணுக்குள் மணியைப்போல உன்னுக்குள் என்னை வைத்தாய் உலகிலே உன்னை விட உயர்ந்தது எதுகும் இல்லை வானிலே நிலவு போல என்...

கவிதை | தனித்துப் போய் விட்ட தனிமை | மு.பொ.

தூரத் தெரிந்த மலைமேட்டில் திடீரென குடிசையொன்று முளைத்து என்னைப் பார்த்து முறைத்தது. யார் அங்கே போய் குடியேறினர், எனக்கு தெரியாது ரகசியமாய்?   முன்னர் என்னைச்சுற்றி ஏவல் புரிந்தவர்களையும் விரட்டினேன். இன்னும் இடைக்கிடை காதுக்கினிய கதைசொல்லி வந்தவர்களையும் விரட்டினேன். சொந்த பந்தங்களும் எனக்கு அதிகம் இல்லை. இப்போ எனக்கு எஞ்சியிருந்ததோ இந்தத்...

கவிதை | நான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வன்

வழிகளை கடக்க என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது பாலஸ்தீனரின் கையிலிருக்கும் இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்க என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும் அமெரிக்க அடையாள அட்டையைப்போல செலவு செய்ய என்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றன சிரியரிப் பிரஜையிடமிருக்கும் இருக்கும் பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல என்னுடைய...

கவிதை | நான் பேசத்தெரிந்த மனிதன் | பா.உதயன்

நான் பேசத்தெரிந்த மனிதன் நான் பேசுவேன் என் கனவு பற்றி பேசுவேன் என் காதல் பற்றி பேசுவேன் நான் எழுதத்தெரிந்த மனிதன் என் வாழ்வு பற்றி எழுதுவேன் என்னோடு வாழ்ந்த மனிதர் பற்றி எழுதுவேன் எங்கு நான் வாழ்ந்தாலும் என் வேர் பற்றி எழுதுவேன் என்...

கவிதை | மொழி | பா. உதயன்

காற்றுக்கும் மொழி உண்டு கடலுக்கும் மொழி உண்டு காலையில் தினம் பாடும் பறவைக்கும் மொழி உண்டு மலை கூடி மொழி பேசும் மௌனமாய் கவி பாடும் அழகான நதி வந்து அதனோடு கதை பேசும் அமுதான தமிழ் போல அந்த குருவிக்கும் மொழி உண்டு மலர் கூட...

கவிதை | உழவே உலை ஆளும் தொழில் | ஞாரே

நித்தமும் உழவே அவன் நினைப்பு நீர் சூழ் உலகினில் அதுவே அவன் பிழைப்பு நெற்றி வியர்வை சிந்திட அவன் உழைப்பு சுற்றும் உலகை காப்பதே அவனின் முனைப்பு காளைகளை அன்போடு விரைந்து ஓட்டி கருக்கல் பொழுதையும் அவன் முந்தி காடு களணியை...

கவிதை | இவளின்றி நானில்லை; ஏன் நீயுமில்லை | த. செல்வா

இவள் அதர்மச்சிறையின் இடியாய் எழுபவள் இரும்புத் திரையாய் சினத்தைச் சுமப்பவள் இனி நதியின் முகமும் இவளில் உண்டு இரும்பின் குணமும் இவளிலுண்டு இவளின்றி இல்லை எதுவுமிங்கு இவளே இனத்தில் இறுதி அம்பு இவள்போல் இல்லை உயர்ந்த மாண்பு இவளிடம் தேடு இதயத் தூய்ம்மை இளமை பற்றி...

சிறுகதை | காவலன் | தீபச்செல்வன்

பின் மாலையில் நகரமெங்கும் பனித் தூற்றலடிக்க, கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலின் மணியோசை ஒரு மெல்லிய இசையாய் படர்ந்தது. சாலை முழுதுமாய், விலத்தமுடியாதபடி நிறைக்கப்பட்ட வாகனங்கள். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்குமாய், கிணற்றுக் கட்டிலில் பிள்ளையை கிடத்தி...

கவிஞர் சேரனின் கவிதைகள் ஸ்பானிய மொழியில்

ஈழத்தை பூர்வீகமாக கொண்ட கவிஞர் சேரனின் கவிதைகள் ஸ்பானிய மொழியில் நூலாக வெளிவந்துள்ளது. குறித்த நூலின் வெளியீடு அண்மையில் ஸ்பானி நாட்டின் பர்சிலோனா நகரத்தில் இடம்பெற்றது. இதன்போது கவிஞர் கலந்து கொண்டு கவிதை வாசிப்பிலும்...

காந்தள் மலர்கள் – தீபச்செல்வன்

  வானம் பார்த்திருந்து மழையை தாகத்தோடு அருந்தி கிழங்குகள் வேரோடி நிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறது காந்தள்க் கொடி. எதற்காக இந்தப் பூக்கள் வருடம் தோறும் கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றன? ஒரு சொட்டு கண்ணீர் விடவும் ஒரு விளக்கு ஏற்றவும் மறுக்கப்படுகையில் எதுவும் இல்லையென எல்லாமும் அழிக்கப்பட்டாகிற்றென்கையில் அனல் கனக்கும் தாயின் கருப்பையை ஈரமாகிக்கின்றன...

பிந்திய செய்திகள்

சிவலிங்கத்தின் முக்கியத்துவம்!

அவசியம் படிக்க வேண்டியவை: பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!! சிவலிங்கம் என்பதை சாதாரணமாக இந்தியாவில் காண முடியும். வீட்டில் அல்லது கோவிலில் உள்ள சிவலிங்கத்தின்...

கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் உண்டாவதற்கான காரணம் என்ன…?

கர்ப்பகாலத்தில் பாதிக்கும் சர்க்கரைநோய் பிரசவம் நடைபெற்றதும் சரியாகிவிடும். பிரசவத்துக்குப் பிறகு, ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான நிலைக்கு வந்துவிடும். ஆனால், சில பெண்களுக்கு அது நிரந்தர சர்க்கரை நோயாக மாறிவிடும். 

தலைமையின் செயல் திறனின்மையே தோல்விக்கு காரணம் | சுமந்திரன்

இலங்கை தமிழ் அரசு கட்சியை பொறுத்தவரை, கட்சியின் தலைவர், செயலாளர் தோற்றிருக்கிறார்கள். ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ள பிரதான கட்சியான தமிழ்...

சசிகலாவுக்கு தேசியப் பட்டியலில் எம்.பி பதவி வழங்க வேண்டும்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்யிட்டு, சுமந்திரனால் பதவி பறிக்கப்பட்ட சசிகலா ரவிராஜிற்கு தேசிய பட்டியல் வாயிலாக எம்.பி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்க கோரிக்கை!

பாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்கக்கோரி பத்திரப்பதிவு துறை தலைவருக்கு பட அதிபர்கள் மனு அனுப்பி உள்ளனர். பாரதிராஜாஇயக்குனர் பாரதிராஜா தமிழ்...
- Advertisement -