அழகியை நீ தேடுகின்றாய்நிலைக்கண்ணாடியை நீ பார்த்ததுண்டா?அழகிக்கேற்ற அழகன் தானா?
அஞ்ஜெலாஜோலி ஒரு கதை சொன்னாள்தேவதைகள் வாழுமிடம் சொர்க்கமாம்
உன்னைச் சுற்றி ஒரு சொர்க்கத்தை உருவாக்குதேவதைகள் ஓடி வருவர்
முழு நேர ஊழியனாய்அவர்கள் தேவைகளை நிறைவேற்று
உன் தாயாரை அவள் பாராள்தந்தையைச் சகிக்க மாட்டாள்உன் உறவுகள் தனித்து விடும்
உண்மையிலே தேவதை உனக்குத் தேவை தானா?

குணவதியை நீ தேடிக் கொண்டால்அவள் குடும்ப விளக்காவாள்உன் அம்மாவும் மகிழ்ந்திடுவாள்அப்பாவைத் தன் அப்பா என்பாள்
மலர்ந்துவிடும் உன் வாழ்வு..
– பத்மநாபன் மகாலிங்கம்