கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான தகவலை ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி பவுல் செல்வரஞ்சன் என்ற 39 வயது நபர் கடந்த 11ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.
அன்றைய தினம் மாலை 4 மணிக்கு Ellesmere Rd & Bellamy Rd N பகுதியில் செல்வரஞ்சன் கடைசியாக காணப்பட்டிருக்கிறார்.
5 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட அவர் சாதாரண உடல் வாகுடன் இருப்பார்.
காணாமல் போன அன்று செல்வரஞ்சன் நீல நிற சட்டை மற்றும் சாம்பல் நிற பேண்ட் அணிந்திருந்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.