இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி வழங்கிட முடியும் என பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் தெரிவித்துள்ளது.
தற்போது நடந்துவரும் கிளினிகல் சோதனை முடிவுகள் வெற்றிகரமாக அமைந்து, அரசின் அனுமதியும் கிடைத்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் 4 கோடி தடுப்பூசி டோசுகளை அமெரிக்காவில் விநியோகிக்க முடியும் என ஃபைசர் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.
வரும் மார்ச் மாத வாக்கில் 10 கோடி டோசுகளை வழங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். அடுத்த மாதம், தங்களது தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.