‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி நிறுவப்பட்ட ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நேற்றுடன் (28) நிறைவடையும் நிலையில் அதன் பதவிக்காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ளார்.
நாட்டின் சகல மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், நிபுணர்கள் சபைகளின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் குறித்த ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.