0
இலங்கையில் தங்கியுள்ள ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் விசா காலாவதியாகும் திகதியை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில், அவர்களின் விசா காலத்தை கட்டணம் அறவிடாது 02 மாதங்களுக்கு நீடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 11,463 ரஷ்ய பிரஜைகள் மற்றும் 3,993 உக்ரைன் பிரஜைகள் நாட்டில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.