சிங்கப்பூரில் உள்ள காட்டுப் பன்றிகளுக்கு ஒருவரை காய்ச்சல் ஏற்பட்டுள்ளமையால் அது மக்களுக்கு பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் என இக்காய்ச்சல் அறியப்படுகின்றது.
உலக விலங்கு நல நிறுவனத்தின் அண்மையத் தகவல்படி, சிங்கப்பூரில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ள 18 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
அவற்றில் 15 பன்றிகள் காய்ச்சல் பீடித்தமையால் உயிரிழந்துள்ளன. ஏனைய 3 பன்றிகளுக்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டமையால் அவை கொல்லப்பட்டதாக மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் பன்றியிலிருந்து பன்றிகளுக்கே பரவும் என்றும் அது மனிதர்களுக்குப் பரவக்கூடியது அல்ல என்றும் பொதுமக்களின் சுகாதாரத்துக்கு ஆபத்து இல்லை என்றும் விலங்கு நல மருத்துவச் சேவைப் பிரிவு (Animal and Veterinary Service) தெரிவித்துள்ளது.
இதேவேளை, சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பன்றி இறைச்சிப் பொருள்களுக்கு, கடந்த 6ஆம் திகதி முதல் தற்காலிகத் தடையை பிலிப்பைன்ஸ் விதித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.