புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சூடானில் இராணுவ மோதல்; 56 பேர் பலி

சூடானில் இராணுவ மோதல்; 56 பேர் பலி

1 minutes read

சூடானில் இராணுவத்தினர் இடையிலான மோதலில் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூடானில் ஆர்.எஸ்.எப். துணை இராணுவ படைகளை, இராணுவத்துடன் இணைப்பது தொடர்பாக துணை இராணுவ தளபதி முகமது ஹம்தான் தாக்லோ மற்றும் இராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் இராணுவம் மற்றும் துணை இராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.

ஆர்.எஸ்.எப். துணை இராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அந்நாட்டின் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம், ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக ஆர்.எஸ்.எப். அறிவித்துள்ளது.

இந்த சூழலில், சூடானில் இராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் பொதுமக்கள் 27 பேர் கொல்லப்பட்டனர் என முதல்கட்ட தகவல் வெளியானது.

அத்துடன், 170 பேர் காயமடைந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், பலி எண்ணிக்கை 56 ஆக அதிகரித்து உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More