புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இராணுவ முகாமில் 4 வீரர்களை சுட்டுக் கொன்ற இராணுவ வீரர்

இராணுவ முகாமில் 4 வீரர்களை சுட்டுக் கொன்ற இராணுவ வீரர்

0 minutes read

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா இராணுவ முகாமில் கடந்த 12ஆம் திகதி அதிகாலை 4.35 மணியளவில் 4 வீரர்கள் காயங்களுடன் இறந்து கிடந்தனர்.

அடையாளம் தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 வீரர்களும் குண்டு பாய்ந்து பலியானார்கள். இதில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மற்ற 2 பேர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பஞ்சாப் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், 4 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இராணுவ வீரரின் பெயர் தேசாய் மோகன் என, பதிண்டா மாவட்ட மூத்த பொலிஸ் அதிகாரி குல்னீத் சிங் குரானா தெரிவித்தார்.

கொல்லபட்டவர்களுடன், கைது செய்யப்பட்ட நபருக்கு தனிப்பட்ட பகை இருந்துள்ளதாகவும், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More