இங்கிலாந்து நாட்டின் மன்னராக சார்ல்ஸ், நாளை சனிக்கிழமை (06) முடி சூட்டப்படுகிறார்.
இதையொட்டி, லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இந்திய வம்சாவளி தொழில் அதிபர் கரன் பிலிமோரியா கலந்துகொண்டார். அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கரன் பிலிமோரியா உரையாற்றுகையில்,
“தாங்கள் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள வேண்டும். இது இருதரப்பு உறவுகளில் அபாரமான தாக்கத்தை ஏற்படுத்தும். இங்கிலாந்து-இந்தியா இருதரப்பு வர்த்தக உடன்பாட்டுக்கு உதவும் என மன்னரிடம் கூறினேன். மன்னர், இந்தியாவின் நண்பர். அவர் இந்தியா மீது மிகுந்த பற்றுதல் வைத்திருக்கிறார்.
“அவர், இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள நான் விருப்பம் கொண்டுள்ளேன். இது தொடர்பாக விரைவில் திட்டமிடலாம் எனத் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டார்.
எனவே, முடிசூட்டிக்கொண்ட பின்னர் மன்னர் சார்லஸ் இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.