பெண்ணொருவர் தனது சொந்த இதயத்தை 16 ஆண்டுகள் கழித்து அருங்காட்சியகத்தில் பார்த்த விநோத சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.
ஜெனிஃபர் என்ற யுவதிக்கே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவருக்கு 22 வயதாக இருந்த போது, எளிதில் சோர்வடைவதாக உணர்ந்துள்ளார். இது குறித்து அவர் வைத்தியரை நாடியபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
அவரை பரிசோதித்த வைத்தியர் அவருக்கு கட்டுப்படுத்தப்பட்ட கார்டியோமயோபதி (restrictive cardiomyopathy) இருப்பதாகவும், இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் அவரது உயிருக்கு ஆபத்து நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து புதிய இதயத்துக்காக காத்திருந்த போது, ஜெனிஃபருக்கு 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொருத்தமான இதயம் கிடைத்தது.
இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, 16 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தனது இதயத்தை அவர் அண்மையில் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.