இங்கிலாந்து சூப்பர் மார்க்கெட்களில் காபி, சாக்லேட் மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலை இந்த மே மாதம் முதல் உயர்வு கண்டுள்ளது.
இதனால் உணவுப் பொருட்களை உள்ளடக்கிய மளிகைக் கடைகளின் மொத்த பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டியதாக British Retail Consortium (BRC) மற்றும் NielsenIQ ஆகியன அறிக்கையிட்டுள்ளன.
புதிய உணவுகளுக்கான விலைகள் ஓரளவு குறைந்துள்ள நிலையிலும் காபி, கோகோ போன்ற பொருட்களின் விலை மிக உயர்ந்துள்ளது.
வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தும் வகையில், உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என இங்கிலாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால், ஏப்ரல் மாதம் 15.7 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த உணவுப் பணவீக்கமும் மே மாதம் 1 முதல் 6 வரையிலான வாரத்தில் 15.4 சதவீதமாக குறைந்துள்ளதாக BRC மற்றும் NielsenIQ புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த எண்ணிக்கை உணவுப் பணவீக்கத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது மிக உயர்ந்த விகிதமாகும்.