அவுஸ்ரேலியா – வடக்கு சிட்னியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு உறவினர்களை ஏற்றி வந்த பஸ் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், 25 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து, ஆஸி – வடக்கு சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் மாநிலம், ஹண்டர் வேலி பகுதியில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்துநடந்த இடத்துக்கு உடனடியாக விரைந்த பொலிஸார் மற்றும் அம்பூலன்ஸ் ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 50 பேரை ஏற்றுக்கொண்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிய போது பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
வளைவில் கட்டுப்பாட்டை இழந்த பஸ், பாதையிலிருந்து விலகி குடைசாய்ந்து பள்ளத்திற்குள் விழுந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் கூறுகிறார்கள்.
பஸ்ஸில் சிறுவர்கள் யாரும் பயணம் செய்திருக்கவில்லை என்பதையும் பொலிஸார் உறுதி செய்தனர்.