பாலஸ்தீன இளைஞரின் வீட்டை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெடிவைத்து தகர்த்தனர்.இதற்கு காரணமாக இஸ்ரேல் ராணுவ வீரரை சுட்டுக்கொன்றர் என கூறப்படுகிறதது.
ஒசாமா தவீல் என்ற பாலஸ்தீன இளைஞர் கடந்தாண்டு இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரை சுட்டுக்கொன்றார்.
பிப்ரவரி மாதம் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், நப்ளஸ் நகரில் தாயாருடன் அவர் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அதிகாலை வந்த இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அவரது வீட்டை மட்டும் வெடிவைத்து தகர்த்தனர்.
வீடுகளை இடிப்பதன் மூலம் உறவினர்களும் தண்டிக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டிவரும் நிலையில், பயங்கரவாதிகள் மனதில் அச்சத்தை விதைக்கவே இங்கணம் செய்வதாக இஸ்ரேல் கூறிவருகிறது.