“பயங்கரவாதி” என அறிவிக்கப்பட்டு, இந்தியாவால் தேடப்பட்டு வந்த பஞ்சாப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் என்பவர், கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் – ஜலந்தரில் இந்து மத போதகரை கொலை செய்ய திட்டமிட்டதாக “காலிஸ்தான் புலி படை” என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் 40 பேரை, மத்திய புலனாய்வு அமைப்பு கடந்த ஆண்டு பயங்கரவாதிகளாக அறிவித்தது.
இந்த அமைப்பின் தலைவராக ஹர்தீப் சிங் செயல்பட்டு வந்துள்ளார்.
ஹர்தீப் சிங், கனடாவில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்தமையால் அவரை கைது செய்ய இந்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், கனடாவின் சுரே பகுதியில் வைத்து மர்மநபர் ஒருவரால் ஹர்தீப் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹர்தீபின் உடலை மீட்டுள்ள கனடா பொலிஸார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.