பெடோபில்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உயிருள்ளதைப் போன்ற குழந்தை பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை உருவாக்கி விற்கிறார்கள் என்று கண்டறிந்துள்ளது.
சிலர் பேட்ரியன் போன்ற முக்கிய உள்ளடக்க பகிர்வு தளங்களில் உள்ள கணக்குகளுக்கு சந்தா செலுத்துவதன் மூலம் இப்படங்களை வாங்குகின்றனர்.
இதனால் சில தளங்கள் பெரிய லாபத்தை ஈட்டுகின்றன. ஆனால், தார்மீகப் பொறுப்பை அவை ஏற்கவில்லை என தேசிய காவல்துறைத் தலைவர் கவுன்சில் கூறியுள்ளது.
துஷ்பிரயோகப் படங்களை உருவாக்குபவர்கள், ஸ்டேபிள் டிஃப்யூஷன் எனப்படும் AI மென்பொருளைப் பயன்படுத்துகின்றனர். இது கலை அல்லது கிராஃபிக் வடிவமைப்பில் பயன்படுத்தி படங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டது.
பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்ய கணினிகளுக்கு AI உதவுகிறது.
ஆனால், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம், குழந்தைகள் மற்றும் சின்னஞ்சிறு குழந்தைகளை பலாத்காரம் செய்வது உட்பட வாழ்க்கை போன்ற படங்களை உருவாக்க இது பயன்படுத்தப்படுவதாக கண்டறிந்துள்ளது.
ஆன்லைன் சிறுவர் துஷ்பிரயோக விசாரணை குழுக்கள் ஏற்கெனவே இதுபோன்ற உள்ளடக்கத்தை எதிர்கொண்டதாக இங்கிலாந்து பொலிஸார் கூறுகின்றனர்.