இங்கிலாந்து தீவான Orkney Islands (ஆர்க்னீ தீவுகள்) இங்கிலாந்தில் இருந்து பிரிந்து வேறு ஒரு நாடுடன் சேரத் திட்டமிட்டு வருகிறது.
முன்னதாக, Orkney Islands நோர்வே மற்றும் நெதர்லாந்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. எனினும், 1472ஆம் ஆண்டு அவை ஸ்கொட்லாந்தின் ஒரு பகுதியாக மாறின.
தற்போது மீண்டும் அவை நோர்வேயுடன் சேரத் திட்டமிட்டு வருகின்றன. அது தொடர்பாக Orkney Islandsகளின் கவுன்சிலர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
தங்களை இங்கிலாந்து அரசும் ஸ்கொட்லாந்தும் கைவிட்டுவிட்டன என Orkney கவுன்சில் தலைவரான James Stockan தெரிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்தின் பிற பகுதிகளுக்குக் கிடைக்கும் நிதி உதவிகள் தங்களுக்குக் கிடைப்பதில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
இது தொடர்பில் பி.பி.சிக்கு தெரிவித்துள்ள நேர்காணலில் அவர், “ஒரு நல்ல அரசாங்கத்தின் அடையாளம், பின்தங்கியவர்களை அது எவ்வாறு ஆதரிக்கிறது என்பதே. எங்கள் தீவுகளில் மிகச்சிறிய சமூகங்கள் சேவை செய்வது மிகவும் கடினமானது. அரசாங்கங்கள் அவர்களை நடத்தும் விதம் ஏற்க முடியாதது.
“நாங்கள் நோர்வேயில் உள்ள சமூகங்களை பொறாமையுடன் பார்க்கிறோம். அங்கு அவர்கள் தொலைதூர மற்றும் கிராமப்புறங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாம் எப்போது மீண்டும் நோர்வேயுடன் சேரப் போகின்றோம் என மக்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் எனவும் Orkney கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர், “இங்கிலாந்தின் எந்தப் பகுதிக்கும் அரச சார்பு அல்லது வெளிநாட்டுப் பிரதேச அந்தஸ்து வழங்குவதற்கான வழிமுறை எதுவும் இல்லை” எனத் தொரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.