Threads என்கிற புதிய சமூக ஊடகத் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள Meta நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து Twitter பரிசீலித்து வருகிறது.
Threads சமூக ஊடகத்தளம் Twitter போன்று எழுத்து அடிப்படையிலானது. Twitterக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட “நட்பான” தளம் என்று Meta நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், “போட்டி இருக்கலாம். ஆனால், ஏமாற்றக்கூடாது” என Twitterஇன் தலைவர் இலோன் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார்.
Twitter முன்னாள் ஊழியர் ஒருவர்தான் Threads சமூக ஊடகத் தளத்தை உருவாக்க உதவினார் என்று கூறப்படுவதை Meta மறுத்துள்ளது.
Threads சமூக ஊடகத் தளத்தில் 30 மில்லியனுக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், தங்களது வர்த்தக இரகசியங்கள் அல்லது பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய தகவல்கள் பயன்படுத்தப்படுவதை நிறுத்த Meta உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென Twitter வலியுறுத்தியதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.