OceanGate நிறுவனம் அதன் ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் இரத்து செய்துள்ளது.
Titan எனும் சுற்றுப் பயணிகளுக்கான நீர்மூழ்கிக் கப்பலை நிறுவிய அந்த நிறுவனம், இரத்து நடவடிக்கை குறித்து அதன் இணையத்தளத்தில் அறிவித்துள்ளது.
இதன்படி, OceanGate நிறுவனத்தின் ஆராய்ச்சிகள், வர்த்தகச் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரபல டைட்டானிக் சொகுசுக் கப்பல் மூழ்கியிருந்த பகுதிக்குச் சென்று அதன் சிதைவுகளைக் காணும் சுற்றுப்பயணத்துக்கு Titan நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், அதில் பயணம் செய்த ஐவர் கடந்த மாதம் உயிரிழந்தனர்.
கப்பலை இயக்கிய OceanGate நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டோக்டன் ரஷ்ஷூம் (Stockton Rush) அதில் உயிரிழந்தார்.
அந்தக் கப்பல் கடல்பயணத்திற்குத் தகுந்த கலனா என்பதை உறுதி செய்ய தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையிலேயே, OceanGate நிறுவனம் அதன் அனைத்து நடவடிக்கைகளையும் இரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.