இங்கிலாந்து பாதுகாப்பு துறை அமைச்சர் அரசியலை விட்டு தான் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் தற்போது பாதுகாப்பு அமைச்சராக உள்ளவர் பென் வாலஸ் (வயது 53).
இந்தநிலையில் அடுத்து வரும் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.
இவர் போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் மற்றும் ரிஷி சுனக் ஆகிய 3 பிரதமர்களின் கீழ் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றி உள்ளார்.
அனுபவம் வாய்ந்த பென் வாலஸ் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளது பிரதமர் ரிஷி சுனக்குக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.