அழகான தோற்றம், இளமையாகத் தெரிவது மற்றும் பொலிவாக இருப்பதற்கு ‘Botox’ மற்றும் ‘Dermal fillers’சிகிச்சைகளை நாடுவோரின் எண்ணிக்கை இலண்டனில் அதிகரித்துள்ளது.
லண்டனில் இருக்கும் மருத்துவர் வின்சென்ட் வோங்கின் (Vincent Wong) மருத்துவ நிலையத்தில் ‘Botox’, ‘Dermal fillers’ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
அவற்றை நாடி வருவோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 50 சதவீதம் உயர்ந்திருப்பதாக Vincent Wong தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக் காலத்தில் ஒருவர் முகத்தைப் பார்த்துப் பேச வீடியோ அழைப்புகளை நம்பியிருக்கவேண்டியிருந்தது. இதற்காக முகம் பளிச்சென அழகாகத் தெரியவேண்டும் என அத்தகைய சிகிச்சைகளை பலர் நாடினர்.
அது தவிர, சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் அந்தப் போக்கிற்குக் காரணமாகியிருக்கலாம் என இலண்டன் தோல் நிபுணர் வோங் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இங்கிலாந்தில் அத்தகைய சிகிச்சைகளை வழங்குபவர்களில் மூன்றில் ஒருவர் தகுதியில்லாமலேயே அவற்றைச் செய்வதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தவறான மருந்தைப் பயன்படுத்துவது, தோலில் தவறான ஆழத்தில் மருந்தைச் செலுத்துவது போன்ற பல ஆபத்துகள் அதனால் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.