செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா டெங்கு காய்ச்சலால் பங்காளதேசத்தில் 303 பேர் உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலால் பங்காளதேசத்தில் 303 பேர் உயிரிழப்பு

0 minutes read

பங்காளதேசத்தில் கடந்த சனிக்கிழமை மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் முதல் செப்டெம்பர் மாதம் வரை பங்காளதேசத்தில் பருவமழைக் காலமாக கருதப்படுகிறது.

பருவமழைக் காலத்தில் நுளம்புகளால் அதிக அளவு நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நாடாகவும் பங்காளதேசம் விளங்குகிறது.

கடந்த ஜூன் மாதம் அதிக அளவு மழைப்பொழிவு ஏற்பட்டதால் பங்காளதேசம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.

நடப்பாண்டில் ஜனவரி முதல் இதுவரை அந்த நாட்டில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் 303 பேர் தீவிர காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மருத்துவமனைகளில் பலர் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் நோய் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More