இங்கிலாந்தில் நீச்சல் போட்டி ஒன்றில் பங்கெடுத்தவர்களில் கடலில் நீந்திய குறைந்தது 57 பேருக்கு வயிற்றுபோக்கும் வாந்தியும் ஏற்பட்டதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சண்டர்லேண்டில் (Sunderland) கடந்த வாரயிறுதின்போது நடைபெற்ற உலக மூவகைப் போட்டியின் ஓர் அங்கம் Roker’s கடற்கரையில் நீந்துவது.
இதில் பங்கெடுத்தவர்களில் 57 பேருக்கே வயிற்றுபோக்கும் வாந்தியும் ஏற்பட்டுள்ளன. இதற்கான காரணம் அறியப்படாத நிலையில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, அந்நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டோர் கேள்வித்தாளை நிரப்பும்படியும் பரிசோதனைக்காக மாதிரியைக் கொடுக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த போட்டிக்குச் சில நாள்கள் முன்பு கடல்நீர் சோதிக்கப்பட்டபோது அதில் அதிகளவு E.coli கிருமி இருந்தது கண்டறியப்பட்டது. எனினும், அது போட்டிக்காகப் பயன்படுத்தப்படும் நீர்ப்பகுதிக்கு அப்பால் எடுக்கப்பட்டது என்று போட்டிகளை நிர்வகிக்கும் British Triathlon நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.