தென்அமெரிக்காவின் வடமேற்கு திசையில் அமைந்துள்ள ஈகுவடார் நாட்டின் தலைநகர் குவிட்டோவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, ஜனாதிபதி வேட்பாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம், அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் அதிகளவு நடக்கும் நாடாகவும், வன்முறைகளுக்கு பெயர் பெற்றதாகவும் ஈகுவடார் உள்ளது.
ஈகுவடார் நாட்டின் தற்போதைய ஜனாதிபதியாக கில்லர்மோ லாஸ்ஸோ உள்ளார்.
அங்கு விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால், இதில் போட்டியிட்டு வெற்றி பெற பெர்னாண்டோ விலாவிசென்சியோ என்பவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், நேற்றைய தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒருவர் திடீரென பெர்னாண்டோ விலாவிசென்சியோவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் உடலில் குண்டுகள் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணைகள் தொடங்கியுள்ளன.
இதேவேளை, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்காமல் விடமாட்டேன் என்றும் அவர்களுக்கு சட்டத்தின் பலம் முழுவதுமாக காட்டப்படும் என்றும் ஈகுவடார் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.