செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு

பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு

0 minutes read

பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக் காலம், நாளை மறுதினம் 12 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், பதவிக் காலம் முடியும் முன்பாகவே பாகிஸ்தான் பாராளுமன்றத்தை நேற்று நள்ளிரவு கலைத்து, அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தை கலைக்க கோரி பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ஜனாதிபதிக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பியிருந்தார்.

பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையை ஏற்றே பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தேர்தல் நடத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More