செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் ஆஸ்திரேலியாவில் விபத்து!

அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் ஆஸ்திரேலியாவில் விபத்து!

0 minutes read

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில், இராணுவப் பயிற்சியின்போது அமெரிக்கக் கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியது.

23 அமெரிக்க இராணுவ வீரர்கள் இருந்த v-22 Osprey ரக ஹெலிகாப்டர், டார்வின் (Darwin) நகரில் விபத்துக்குள்ளானதாக Sky News Australia தெரிவித்தது.

இந்த விபத்தில் 3 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டது.

ஐவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் வழங்குவதில் ஆஸ்திரேலிய அரசாங்கம் கவனம் செலுத்துவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி (Anthony Albanese) கூறியிருக்கிறார்.

இந்த விபத்திற்கான காரணம் புலனாய்வு செய்யப்படுகிறது.

மூலம் – AFP

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More