ஐரோப்பிய நாடுகளில் ஆண்டுதோறும் நடைபெறும் Black Friday விற்பனை மக்களிடையே மிகவும் பிரபலமானது.
எனினும், இம்முறை Black Friday தள்ளுபடி விற்பனையின்போது புதிய ஆடைகளை வாங்க வேண்டாம் என்று பிரான்ஸ் அரசாங்கம், அந்நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அதை ஊக்குவிக்கும் விளம்பரம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஓர் இளைஞர், கடை ஊழியரிடம் ஆலோசனை கேட்கிறார். அதற்கு அந்த ஊழியர், “எதுவும் வாங்க வேண்டாம்… பூமிக்கும் உதவலாம்… பணமும் சேமிக்கலாம்” என்று கூறுகிறார்.
குறித்த விளம்பரத்தை, சுற்றுச்சூழலுக்கான அமைச்சர் கிறிஸ்டோஃப் பெச்சு ஒழுங்கமைத்ததாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், அரசாங்கத்தின் ஏனைய துறைகளைச் சேர்ந்தோர் மேற்படி விளம்பரம் நேர்மையான பல வர்த்தக நிலையங்களை பாதிக்கும் என குறைகூறியுள்ளனர்.
இதனையடுத்து, கடைகளுக்குப் பதில் இணைய விற்பனை தளங்களைக் குறிவைத்திருக்க வேண்டும் என்று சுற்றுச்சூழலுக்கான அமைச்சர் கிறிஸ்டோஃப் பெச்சு ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும், குறித்த விளம்பரத்தை மீளப்பெறப்போவதில்லை என்றும் அவர் தெரிவத்துள்ளார்.