லண்டனின் ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்தின் 10 சதவீதப் பங்கைச் சவுதி அரேபியாவின் அரசாங்க முதலீட்டு நிறுவனம் (Public Investment Fund) வாங்கவுள்ளது.
2006ஆம் ஆண்டு முதல் அந்தப் பங்கை ஸ்பெயினின் Ferrovial நிறுவனம் வைத்துள்ளது.
சவுதி நிறுவனத்துடன் Ferrovial செய்து கொண்டுள்ள உடன்பாட்டின் மதிப்பு சுமார் 3 பில்லியன் டாலர் என்று BBC செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கு இங்கிலாந்து அரசாங்கம் அனுமதி வழங்கவுள்ளதாத தெரிகிறது.
கணிசமான கடன் காரணமாக ஹீத்ரோ விமான நிலையம் இவ்வாண்டு நட்டத்தைச் சந்தித்து வருகிறது.
வட்டி விகித உயர்வு காரணமாக அதன் கடன்சுமை அதிகரித்துள்ளதாக BBC சுட்டிக்காட்டியுள்ளது.
பயணிகளுக்கான கட்டணத்தைக் குறைக்கவும் அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் முடிவெடுத்துள்ளது.
இதன்படி 2023இல்: 31.57 பவுண்ட் ஆகவுள்ள கட்டணம் 2024இல்: 25.43 பவுண்ட் ஆக குறைக்கப்படவுள்ளது.
அந்தக் கட்டணம் ஓடுபாதைகள், பயணிகளின் உடைமைகளை நிர்வகிக்கும் முறை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கான செலவுகளைச் சமாளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.