லண்டனில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே கத்தியால் குத்தப்பட்ட ஈரானிய ஊடகவியலாளர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறி உள்ளார்.
ஈரான் இன்டர்நேஷனல் பாரசீக மொழி நெட்வொர்க்கில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பூரியா ஜெராட்டி, வெள்ளிக்கிழமை விம்பிள்டனில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறியபோது தாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து பயங்கரவாத தடுப்பு பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன், சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, அவரும் அவரது மனைவியும் மெட் பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் ஒரு பாதுகாப்பான இடத்தில் வசித்து வருவதாக ஜெராட்டி கூறியுள்ளார்.