மத்திய இலண்டனில் உள்ள வீடொன்றில் இருந்து 27 வயது பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார்.
ஏஞ்சலா என்று அழைக்கப்படும் குறித்த பெண், திங்களன்று வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள ஸ்டான்ஹோப் பிளேஸில் அதிகாரிகளால் மீட்கப்பட்டிருந்தார்.
பெருநகர காவல்துறை, விசாரணையை முன்னெடுத்துள்ளதுடன், பிரேத பரிசோதனையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டமையால் மரணம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
எனினும், கொலையாளியை இதுவரை அடையாளம் காண முடியவில்லை.
பெண்ணை தாக்கியவர் அவருக்குத் தெரிந்தவராக இருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், விசாரணைகள் பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.