இங்கிலாந்து இந்த ஆண்டின் வெப்பமான நாளை வெள்ளிக்கிழமை அனுபவித்ததாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்திய இலண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் பூங்காவில் வெள்ளிக்கிழமை வெப்பனிலை 31.9C ஐ எட்டியதுடன், 2024 ஆம் ஆண்டில் அதிக வெப்பம் பதிவான நாளாக அமைந்தது.
இருப்பினும், வரும் வாரத்தில் வெப்பநிலை 20C ஐ எட்ட வாய்ப்பில்லை என்று வானிலை அலுவலக முன்னறிவிப்பாளர் தெரிவித்தார்.
முக்கியமாக ஜூலை மாத்தில் வெப்பனிலை சராசரியாக 20C வரை இருக்கும்.
திங்கட்கிழமைக்குள், வானிலை மாறக்கூடியதாக இருக்கும் எனினும், அடுத்த வாரம் பெரும்பாலும் வறண்டதாக காணப்படும்.
அத்துடன், “ஜூலை மாத இறுதியில்” வெப்பநிலை மீண்டும் உயரக்கூடும் என்று வானிலை அலுவலக வானிலை ஆய்வாளர் டாம் மோர்கன் கூறினார்.