இந்த வார தொடக்கத்தில் வட கிழக்கு இங்கிலாந்தில் வன்முறைச் சீர்கேடு தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் தொடர்வதால் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுந்தர்லேண்டில் மோதல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்யத அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிட்டி சென்டர் மற்றும் ஃபோர்டு எஸ்டேட் பகுதியில் கைதுகள் இடம்பெற்றதாக பொலஸார் கூறியுள்ளனர்.
வன்முறைக் சந்தேகத்தின் பேரில் 43 வயதுடைய ஒரு பெண், மற்றும் வன்முறையைத் தூண்டியதாக சந்தேகத்தின் பேரில் 55 வயதுடைய ஆண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 12 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், இந்த வார தொடக்கத்தில் ஹார்டில்பூலில் இடம்பெற்ற வன்முறைக் தொடர்பாக கிட்டத்தட்ட 20 பேர் கைது செய்யப்பட்டதாக கிளீவ்லேண்ட் பொலிஸார் கூறியுள்ளனர்.
சிலர் ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், அவர்களில் பலர் செப்டம்பர் தொடக்கம் வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.