சனிக்கிழமை அதிகாலையில் பிரிக்ஸ்டனில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் இரண்டு ஆண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 24 மற்றும் 26 வயதுடைய இருவர் காயமடைந்தாக, மெட் பொலிஸ் அதிகாரிகள் நள்ளிரவு 12.07 மணியளவில் ஓவர்டன் வீதிக்கு அருகில் உள்ள லௌபரோவில் உள்ள சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.
24 வயதான இளைஞன் தற்போது உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் போராடி வருகிறார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது உடல்நிலையை வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 26 வயதான இளைஞரின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, துப்பறியும் நபர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, பிரிக்ஸ்டன் பகுதியில் பொலிஸ் பிரசன்னம் அதிகரிக்கப்படும் என மெட் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.